ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

டொனால்ட் டிரம்ப் கொள்கையால் இந்தியாவிற்கு இடம்மாறிய அமெரிக்க 'ஆரக்கிள்'..!

2வது பெரிய நிறுவனம்டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் மோடி என்று கூறும் அளவு நாளொரு சட்டம் !  எடுத்தேன் கவிழ்ந்தேன் என்று சதா பஞ்சு டயலாக்குகளை அறிவிப்புகளாக வெளியிட்டு மோடியின் சாதனையை விரைவில் முறியடித்து விடுவார்
சென்னை: உலகளாவிய மென்பொருள் சேவையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனம் தனது தலைமையிடமான அமெரிக்காவை விட்டுவிட்டு மிகப்பெரிய டெலப்மெண்ட் சென்டரை இந்தியாவில் உருவாக்க உள்ளது. எங்கே தெரியுமா..? இந்திய மென்பொருள் சந்தைக்குத் தலைமையிடமாக விளங்கும் பெங்களுரில் தான் ஆரக்கிள் நிறுவனத்தின் புதிய டெவலப்மென்ட் சென்டர் அமைக்கப்பட உள்ளது. ஆமெரிக்கச் சந்தையில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்கப் பல காலம் ஆகும் என உண்மையை உணர்ந்த ஆரக்கிள் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்தியாவில் புதிய புதிய டெவலப்மென்ட் சென்டர் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தற்போது இருக்கும் விசா பிரச்சனையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ள ஆரக்கிள்.


 அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு மிகப்பெரிய அளவில் மென்பொருள் சேவை அளித்து வரும் ஆரக்கிள் பெங்களுரில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்து மிகப்பெரிய அளவிலான ஒரு டெவலப்மென்ட் சென்டரை துவங்க உள்ளது. இதனைக் கொண்டு இந்தியா மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் புதிய வர்த்தகத்தைப் பிடிக்கவும் ஆரக்கிள் முடிவு செய்துள்ளது. இப்புதிய டெவலப்சென்டர் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என் ஆரக்கிள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வது ஆரக்கிள், இந்நிறுவனம் டேட்டாபேஸ், கிளவுட் சேவைக்கான மென்பொருள் தயாரிப்பதையும், அதற்கான புதிய தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதை பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இப்புதிய டெலப்மெண்ட் சென்டர் முழுமையாக இயங்க இன்னும் 3 வருடங்கள் ஆகும்.

அதேவேளையில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவு செய்துள்ளது ஆரக்கிள்.
சென்னை: உலகளாவிய மென்பொருள் சேவையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனம் தனது தலைமையிடமான அமெரிக்காவை விட்டுவிட்டு மிகப்பெரிய டெலப்மெண்ட் சென்டரை இந்தியாவில் உருவாக்க உள்ளது. எங்கே தெரியுமா..?  tamiloneindia

கருத்துகள் இல்லை: