இன்று ஸ்டாலின் டெல்லிக்குச் சென்று ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தின் பொதுப் பிரச்னைகள் குறித்தும் சசிகலா முதலமைச்சராகப் பொறுப்பேற்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் எடுத்துரைப்பதாக இருந்தது. ஆனால் ஸ்டாலினின் இந்தத் திட்டத்துக்கு கட்சியில் இருவேறு கருத்துகள் நிலவியதால் டெல்லி செல்லலாமா? வேண்டாமா? அல்லது திமுக சார்பில் வேறு ஒருவரை டெல்லிக்கு அனுப்பி, சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதில் உள்ள சிக்கல்களை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கச் சொல்லலாமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஸ்டாலினுக்கு அப்பாயின்மென்ட் கேட்டு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் கொடுக்கப்பட்ட கடிதம் இன்னமும் வாபஸ் பெறப்படவில்லை.,மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக