ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

50 கார்களுடன் சென்ற சசிகலா: ஒவ்வொரு காரிலும் பணம்? (படங்கள்)

நக்கீரன் :சென்னை அருகே கூவத்தூரில் கடந்த புதன்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை இரண்டாவது முறையாக சந்திக்க ஞாயிற்றுக்கிழமை மாலை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார் சசிகலா. அவரது காருக்கு முன்னும் பின்னும் சுமார் 50 கார்கள் சென்றன. இதில் ஒரு கேரவேனும் அடக்கம். அதில் அமைச்சர்கள் இருந்தனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை ஒ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்திய நேரத்தில், கவர்னர் மாளிகையில் மைத்ரேயன் இருந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சசிகலாவுக்கு ஒரு கார். அமைச்சர்களுக்கு ஒரு கேரவேன். பாதுகாப்புக்கு ஒரு 4 கார் என 6 கார்களே போதுமானது. சரி 10 கார்களே போகட்டும். 50 கார்கள் எதற்கு. காருக்குள் என்ன இருக்கிறது. பல ஊடங்களில் செய்தி வருவதைப்போல பணம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரொக்கமாக கொடுக்கிறார்கள் என நினைக்கிறோம். எவ்வளவோ பேசியும் சில எம்எல்ஏக்கள் சம்மதிக்கவில்லை என்பதால் பணத்தை நேரில் காட்டி சம்மதிக்க வைக்க நினைக்கிறார்கள். ஏன் செய்தியாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் விடவில்லை. அவர்களை விட்டால் என்ன. எம்எல்ஏக்களை சந்திக்கின்ற சசிகலா என்ன பேசுகிறார் என்பதை மக்கள் அறிய வீடியோ எடுக்க அனுமதித்தால் என்ன. ஒ.பன்னீர்செல்வத்தை சந்திக்கிறவர்கள் மைக்கில் பேசுகிறார்களே. அவரை ஆதரிக்கிற அமைச்சர் உள்பட 6 எம்எல்ஏக்களும் சுதந்திரமாக செயல்படுகிறார்களே. கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைப்பது ஏன் என்பதைத்தான் மைத்ரேயன் ஆளுநரிடம் கூறியிருப்பார் என்கின்றனர். படங்கள்: செண்பக பாண்டியன்

கருத்துகள் இல்லை: