திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் - பன்னீர் டீல் ? 45 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.... ஆனால் 3 இல் 2 தேவையே ?

திமுக உயர்மட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்நிலையில், இன்று கூடும் திமுக உயர்மட்டக்குழு கூட்டத்தையொட்டி நேற்று இரவே சட்ட வல்லுனர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இதே பிரச்னை போன்று இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கியிருக்கிறார்கள்.
அதன்படி, மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு போதிய மெஜாரிட்டி இல்லையென்றால், அடுத்த மெஜாரிட்டி உள்ள சட்ட மன்ற குழுத்தலைவரை அழைக்க வேண்டும். இதில், சட்டமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின்படி சபாநாயகரின் முடிவே இறுதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்.சிடமிருந்து வந்த தகவலில், அதிமுகவில் இருந்து 45 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.நீங்கள் ஆதரவு அளித்தால் நான் முதல்வராக தொடருவேன் என்று கூறியிருந்தார். இதை வைத்துதான், ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடருவார் என்று செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், 3இல் இரண்டு மடங்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தால்தான் அவரை சட்ட மன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இமாச்சலப்பிரதேச வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், இன்று கூடவிருக்கும் திமுக உயர்மட்டக்குழுவில் ஓ.பி.எஸ்.க்கு திமுக ஆதரவளிப்பதாக இல்லை என்று சூசகமாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தற்போதைய தகவல் தெரிவிக்கிறது மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: