திங்கள், 19 டிசம்பர், 2016

சின்ன புரட்சி தலைவர் ஒ.பன்னீர்செல்வம் இதயதெய்வம் புரட்சி சின்னம்மாவுக்கு பதவியை விட்டுகொடுக்க தயாரில்லை!

OPS supportes paste posters Chinna Purachi Talaivarஅம்மா இறந்த உடன் அதிமுகவினர் சின்னம்மா புகழ் பாடத் தொடங்க, ஒபிஎஸ் கோஷ்டியினரோ சின்ன புரட்சித்தலைவர் பட்டம் அளித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். By: Mayura Akilan
சென்னை: சினிமாவில்தான் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் பட்டம் கொடுப்பார்கள். இளையதளபதி புரட்சி தளபதி, சின்ன தளபதி பட்டமும் கொடுத்து போஸ்டர் ஓட்டினார்கள். புரட்சி தலைவர் என்பது எம்ஜிஆரை மட்டுமே குறிக்கும் என்பதால் விஜயகாந்த் புரட்சி கலைஞரானார். இந்த பட்டங்கள் இப்போது அரசியலிலும் நுழைந்து விட்டது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த உடன் கறுப்பு எம்.ஜி.ஆர் ஆனார்.

அம்மா என்றாலே ஜெயலலிதாதான் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரியும். நேற்று வரை அம்மா புராணம் பாடி வந்த அதிமுகவினர் இப்போது சின்ன அம்மா சசிகலாவின் புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.
சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஆட்சியையும் கட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டுக்கொண்டு போயஸ் கார்டன் வந்து வரிசையில் நிற்கின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் என்பது வரை சின்னம்மா ஓகே தான்.
ஆனால் முதல்வராக ஓபிஎஸ் ஒத்துக்கொள்வாரா? அவரது ஆதரவாளர்கள் விடுவார்களா என்பதுதான் கேள்வி. சின்ன அம்மாவிற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்க்கு சின்ன புரட்சித் தலைவர் பட்டம் சூட்டி போஸ்டர் ஒட்டி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
சின்ன சின்னம்மா, பெரிய பெரியம்மா… சித்தப்பா, என இன்னும் எத்தனை போஸ்டர்கள் முளைக்கப் போகிறதோ? 
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: