திங்கள், 19 டிசம்பர், 2016

திமுகவுக்கும் அதிமுகவுக்கு அடிப்படை பொருளாதார அறிவு கிடையாது .. பாஜகவின் செல்லாத நோட்டு மோசடி பற்றி...

இந்த திமுகவும் அதிமுகவும் என்னதான் செய்து கொண்டு இருக்கின்றன?
500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது எனும் மோடியின் அறிவிப்பால் நாடும், நாட்டின் மக்களும் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன, தமிழ்நாட்டிலும் கூலித்தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கின்றனர். இன்னமும் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம்களின் முன்பு வரிவையில் நிற்கின்றனர். நிலைமை சரியாகும் என்று எந்த நிச்சயமும் இல்லை.
இந்த அறிவிப்பு குறித்து அடிப்படை ஞானம்கூட இல்லாமல் கருப்புப்பணத்தை ஒழிப்பது நல்ல நடவடிக்கைதான், ஆனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என யாருக்கும் வலிக்காமல் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு, ஒரு ஆர்ப்பாட்டமும், ஒரு மனிதச் சங்கிலி இயக்கமும் நடத்திவிட்டு, ‘அப்பாடா’ என ஓய்வெடுத்துக்கொண்டது திமுக.
அதிமுக பக்கமிருந்து ஒரு சத்தமும் இல்லை.
இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களின் உடல்நலம் இந்தக் காலத்தின் பெரிய பிரச்சினையென்றாலும், மக்களின் நலன் குறித்து இவர்களின் அக்கறை இவ்வளவுதானா?

வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகப் போகிறது. தமிழர்களின் திருவிழா பொங்கலைக் கொண்டாட முடியாமல், தமிழகம் பெரும் அவலத்தை எதிர் கொள்ளப் போகிறது.
அப்போதும் இந்த ஆகப்பெரும் கட்சிகள் இரண்டும் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போலும்!
வெட்கக்கேடு!  முகநூல் பதிவு  மாதவா ராஜ்

கருத்துகள் இல்லை: