வியாழன், 22 டிசம்பர், 2016

ஐ ஏ எஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் .. 1.5 கோடி .. 6 கிலோ தங்கம் பிடிபட்டது .. பல்லாவரத்தில்

தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் வருமான வரி சோதனை... சென்னையில் மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஐடி ரெய்டு... 6 கிலோ தங்கம் ரூ. 1.5 கோடி பணம் 
சென்னை - ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் ரெய்டு: 1.5 கோடி பணமும், 6 கிலோ தங்கமும் பறிமுதல் தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் புதன்கிழமை அதிகாலை முதல் நடந்த வருமான வரித்துறை சோதனை, இன்று
அதிகாலை நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று, சென்னை பல்லாவரத்தில் ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தலைமை செயலாளரை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை பல்லாவரத்தில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1.5 கோடி பணமும், 6 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சேகர் ரெட்டி விவகாரத்திற்கும், நாகராஜன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  maalaimalar

கருத்துகள் இல்லை: