செவ்வாய், 20 டிசம்பர், 2016

காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசு மகன் விஷ்ணு குடி போதையில் அடாவடி.. போலீஸ் கைது


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகன் தனது நண்பர்களுடன் போதையில் கலாட்டாவில் ஈடுபட்டதாகவும், இது பற்றி கேட்ட இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் முற்றியதால் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அண்ணா நகர் சாந்திக்காலனியில் வசித்து வருகிறார். இவருக்கு ராமச்சந்திரன், விஷ்ணு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இரண்டாவது மகன் விஷ்ணு இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. மதுபோதையில் நண்பர்களுடன் இரவு அண்ணா நகர் 2 அவின்யூ பகுதியில் நின்று கொண்டு போவோர், வருவோரை தாக்கியதாகவும். பெண்களை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் அவசர போலீசுக்கு போன் செய்து புகார் அளித்ததின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. விசாரிக்க சென்ற திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் நட்ராஜனை கிண்டல் செய்தும், தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. எங்கப்பா யாரு தெரியுமா? இப்ப எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா ? என்றெல்லாம் பேசி ஆய்வாளரை முறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அவர்கள் மீது பிரிவு 75 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமினில் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது. பெரிய தலைவரின் மகன் என்பதால் மது குடித்த சான்றிதழ் பெறாமல் அனுப்பி வைத்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெரிய தலைவர் மகன் என்ற மமதையில் திருநாவுக்கரசர் மகன் தகராறில் ஈடுபட்டு கைதானது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லைவ்டே ,கம்

கருத்துகள் இல்லை: