புதன், 21 டிசம்பர், 2016

ராம மோகன ராவ் யார்?

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம மோகன ராவ், கடந்த 1985 பேட்ஜை சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற உள்ள ராம மோகன ராவின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் திறன் படைத்தவர். கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் இவர் தான் தலைமை செயலாளராக வரப்போகிறார் என்ற பேச்சு அடிப்பட்டது. அப்போது அவர், கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில், முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன், 8 ம் தேதி, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமைச் செயலாளர் பதவி பெற்றவர் ராம மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20வது இடத்தில் இருந்த இவர், இந்தப் பதவிக்கு வந்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி இவர் தலைமைச் செயலாளர் பதவிக்கு வந்தபோதே சர்ச்சைகள் உருவாகின. இவர், எம்.ஏ., பொருளியல், எம்.காம்., விலை மதிப்பீடு கணக்குபதிவியல் (காஸ்ட் அக்கவுண்டன்சி) படித்தவர். தமிழக அரசில், சமூக நலம், வீடு மற்றும் நகர மேம்பாடு, தொழில் துறைகளில் பணியாற்றியவர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல்அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை, அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு சென்றதில்லை. எனினும், 2001 முதல், 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். nakkeeran

கருத்துகள் இல்லை: