திங்கள், 19 டிசம்பர், 2016

செத்தும் கொடுத்தார் / கெடுத்தார் சீதக்காதி / ஜெயா ! பன்னீரு மோடியை பார்த்தது சேகர் ரெட்டி ரெயிடு ..

08-o-paவிரைவிலேயே துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது
பிஎஸ் இன்று டெல்லி பயணம்” என்று ஊடகங்கள் கொட்டை எழுத்தில் போட்டிருக்கும் தலைப்புச் செய்தியில் இரண்டு சமாச்சாரங்கள் உள்ளன. ஒன்று அவர் புயல் நிவாரண நிதி கேட்டு பிரதமரிடம் மனு அளிக்கிறார். இரண்டு ஜெயாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குமாறு மன்றாடுவார்.
“வர்தா” புயல் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. மின்சாரம், குடிநீர் கேட்டு பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் ஒதுக்கிய 500 கோடி ரூபாய் நகரின் தொழில் சார்ந்த அடிக்கட்டுமான வசதிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருக்கிறது. வாழ்விழந்த, பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் மீட்புக்கு முதன்மையாக ஒதுக்கவில்லை. மத்திய அரசோ இன்னும் ஓரிரு நாளில் நிபுணர் குழுவை அனுப்புமாம்.

வந்தவர்கள் சமோசா சாப்பிட்டு டீ குடித்து மாமல்லபுரத்திற்குச் இன்பச் சுற்றுலா சென்று புயல் ஆய்வு அறிக்கையை எழுதுவார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் டெல்லிக்குச் சென்று நிவாரண நிதி கேட்பாராம். ஆனால் அவர் நிவாரணம் கேட்பது வர்தா புயலின் பாதிப்பிற்காக, சேகர் ரெட்டி ரெய்டுக்கா என்பது பரம இரகசியம். மற்றபடி அவரது முதன்மையாக நோக்கம் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது பெறுவது, நாடளுமன்றத்தில் ஜெயாவின் வெண்கலச்சிலை நிறுவுவது, எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெயாவுக்கென்று தனியாக சமாதி கட்ட அனுமதி பெறுவது மட்டுமே.
வர்தா புயலடித்த மறுநாளில் அவர் மக்களைப் பார்த்தார், மதிய உணவை ஓட்டலில் சாப்பிட்டார், அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார் என்று பத்திரிகைகளெல்லாம் உருகின. தமிழ் சினிமாவின் இறுதிக் காட்சியில் தமிழ்நாட்டு போலிசு வந்து வில்லன்களை பிடிப்பதெல்லாம் வீரத்தின் இலக்கணம் என்றால் கோழைத்தனம் கூட வெட்கப்படும்.
ஊரே தீப்பிடித்து அழியும் போது, வயலினின் நரம்பு கிழிந்து விட்டது, அதற்கு தங்க நரம்பு போட துபாய் போகிறேன் என்கிறார் ஓபிஎஸ்.
சட்டைப் பையில் அம்மா படமும், அமைச்சரவை கூட்டங்களில் அம்மாஃபோட்டோவையும் வைத்து முதலமைச்சர் பணி புரிகிறார் அடிமை ஓ.பி.எஸ். விரைவிலேயே இந்த துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது.
ஜெயா இருந்த போது கட்டவுட்டுகளை வைப்பதிலும், அம்மா போற்றி கவிதை பாடுவதிலும் காலம் கழித்த அ.தி.மு.க கூட்டம் அவர் இறந்த போதும் அதையே செய்கிறது. சீதக்காதி செத்தும் கொடுத்தார் என்றால் அம்மா செத்தும் கெடுக்கிறார் எனலாம்.  வினவு.காம்

கருத்துகள் இல்லை: