வியாழன், 4 ஆகஸ்ட், 2016

கிரண் பேடியுடன், முதல்வர் மோதலா?

முன்னாள் குற்றப் பழங்குடிகள், கைதேர்ந்த கொலைக் குற்றவாளிகள்”:என்று திருவாய் மொழிந்த  கிரண் பேடி நிச்சயம் ஒரு இந்துத்வா மனுவாதிதன். புதுச்சேரிக்கு உள்ள  பிரெஞ்சு  மற்றும் பல கலாசார மாண்புகள் பற்றி எதுவம் தெரியாமலேயே வெண்கல கடை யானை போல செயல்படுகிரரா?

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருப்பவர் கிரண் பேடி. தனது பொறுப்பை ஏற்றவுடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் தூய்மை போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார். பல இடங்களில் நேரடி விசிட் செய்து, தானே முன்னின்றும் சுற்றுச்சூழல் மாசை குறைக்க முயற்சித்தார். போக்குவரத்து நெரிசல் குறைப்பு, நிர்வாகத்தில் தூய்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். இவரின் செயல்பாடுகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவர இது, முதல்வர் நாராயணசாமியின் செல்வாக்கைக் குறைக்கிறது என்ற பேச்சு பரவலாக புதுச்சேரியில் ஒலிக்கிறது. இதனால் துணைநிலை ஆளுநரிடம் மோதல்போக்கை முதல்வர் கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியுடன் பிரச்னையில்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணசாமியிடம், "ஆளுநர் கிரண்பேடியுடன் மோதல்போக்கு உள்ளதா? என்று கேட்டபோது, "எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. நேற்றுகூட ஆளுநர் கிரண் பேடியை ராஜ்நிவாஸில் நானும் அமைச்சர்களும் சந்தித்துப் பேசினோம். அதையடுத்து, அனைவரும் ராஜ்நிவாஸில் இரவு உணவு சாப்பிட்டோம்" என்று குறிப்பிட்டார். யூனியன் பிரதேசங்களில் அரசைவிட ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "டெல்லி மற்றும் புதுச்சேரி நிர்வாகத்துக்கு இடையே வித்தியாசம் உள்ளது. புதுவையைப் பொருத்தவரை சட்டம், ஒழுங்கு, இடம், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அரசுக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை இன்னும் பார்க்கவில்லை. அதைப் பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்" என்றார்.  மின்னம்பலம்.கம

கருத்துகள் இல்லை: