வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஆடிப்பெருக்கு டாஸ்மாக் விற்பன 400 கோடி எகிறியது .. குரு பெயர்ச்சியினால் இந்த வருமானம் குறைவாம் ...

சேலம்:தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆடிப்பெருக்கு அன்று, ஒரே நாளில், 480 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தற்போது உள்ள, 6,323 டாஸ்மாக் கடைகளில், தினமும் மது விற்பனை, 62 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக் கிழமைகளில், 90 முதல், 110 கோடி ரூபாய் வரையிலும் நடப்பது வழக்கம். அதுவே தீபாவளி, பொங்கல் பண்டிகை நாளில், 500 கோடி ரூபாயை தாண்டும்.
ஆடி 18ம் பெருக்கு நாளில், வழக்கமாக மது விற்பனை அதிகம் இருக்கும். ஆனால், நேற்று முன்தினம், அமாவாசை, குரு பெயர்ச்சியும் சேர்ந்து கொண்டாடப்பட்டதால், சைவ உணவுகளையே அதிகம் பேர் சாப்பிட்டனர்.இதன் காரணமாக, டாஸ்மாக்கில் எதிர்பார்த்த மது விற்பனை இல்லை. நேற்று முன்தினம் மட்டும், 480 கோடி ரூபாய்க்கு, தமிழகத்தில் மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டில், ஆடி 18ம் பெருக்கு பண்டிகை நாளில், 550 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்தது. நடப்பாண்டில், 70 கோடி ரூபாய் குறைந்துள்ளது.


டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஆடிப்பெருக்கை பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தில் தான் கொண்டாட்டம் களை கட்டு கிறது. கொங்கு மண்டலத்தில் நேற்று முன்தினம் மது விற்பனை வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்தது. ஆயினும், வட, தென் மாவட்டங்களில், 20 சதவீதம் மட்டுமே உயர்ந்த தால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு ஆடிப்பெருக்கில் மது விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: