மாலத்தீவின் அதிபரைக் கொல்வதற்கான
சதித் திட்டம் தொடர்பாக துணை அதிபர் அஹ்மத் அதீப் கைதுசெய்யப்பட்டுள்ளார்
என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கும் மாலத் தீவின் துணை அதிபர் அஹ்மது அதீப். தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்படுள்ள அஹ்மத் அதீப்
மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் நஸீர்
தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பர் 28ஆம் தேதி, விமான நிலையத்திலிருந்து அதிபர் அப்துல்லா யமீன் வீடு திரும்புவதற்காக தனது படகில் வந்துகொண்டிருந்தது குண்டு ஒன்று வெடித்தது.
இதில் அதிபர் காயமின்றித் தப்பினார். இதில் அவரது மனைவி, உதவியாளர், மெய்க்காப்பாளர் ஆகியோர் காயமடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகிறது. அதிபர் அப்துல்லா யமீன் படகு மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவரது மனைவி, உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர். >இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு முன்பாக நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அதிகாரபூர்வ பயணமாக வெளிநாடு சென்றிருந்த அதீப் நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதீப் தற்போது தீவுச் சிறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக