பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகின. மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனையில், முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. nakkheeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக