ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டத்தை வாங்க மறுத்த இளைஞர்!

ஸ்ரீநகர்: இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்குவதற்கு காஷ்மீர் இளைஞர் ஒருவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை, தாத்ரி சம்பவம் மற்றும் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா வருகின்ற 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்குவதற்கு காஷ்மீர் இளைஞர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து பட்டம் பெறுவதற்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்ற இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீர் என்பவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள இளைஞர் சமீர் கோஜ்வாரி, ''நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை கண்டித்து போராடும் 41 எழுத்தாளர்கள் தங்களது விருதினை திருப்பி அனுப்பி உள்ளனர்.

இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் வெளியாகியுள்ளது. முதுகலை பட்டம், மிகவும் மதிப்புமிக்கது. ஆனாலும், 19ம் தேதி “பட்டமளிப்பு நாள்” நான் பட்டத்தை ஏற்க போவதில்லை” என்று தெரிவித்து உள்ளார்.

இளைஞர் சமீரின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .விகடன்.com

கருத்துகள் இல்லை: