டொரண்டோ: கனடாவில் 9 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இங்கு லிபரல் கட்சி புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது. மாற்றம் வேண்டி மக்கள் இந்த கட்சிக்கு ஓட்டளித்துள்ளதாக கனட நாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன. லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ருதா கனடாவின் புதிய பிரதமராகிறார் .
கனடாவில் நடந்த பார்லி., தேர்தல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. முழு முடிவுகள் நாளைக்குள் வந்து விடும்.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, எதிர் கட்சியான லிபரல் கட்சி, இடது சாரியான என் டி பி கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள் போட்டியிட்டன .
ஓட்டு எண்ணிக்கையில் லிபரல் கட்சி 185 தொகுதிகளில் வெற்றி . கன்சர்வேடிவ் கட்சி 99 தொகுதி, . இடது சாரியான என் .டி .பி., கட்சி 44 தொகுதிகளில் முறையே வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க பெறும்பான்மையாக 170 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பின்னடைவு ஏன் ? தேர்தல் முடிவுகளில் பின்னடைவை சந்தித்துள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான ஸ்டீபன் ஹாப்பர் தனது பொறுப்பில் இருந்து விலகவுள்ளார். இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்ட திட்டங்கள் மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது . குறிப்பாக இங்கு குடியுரிமை பெறுவோர் முகத்திரை (பர்தா ) அணியக் கூடாது என அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்க கன்சர்வேடிவ் கட்சி திணறியது. வளர்ச்சி திட்டங்கள், சில சட்டங்கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது .
இந்நிலையில் லிபரல் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதே, எங்களின் வெற்றிக்கு காரணம் என இந்த கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது . லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ருதா(JustinTrudeau) மறைந்த முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகன் ஆவார் . இவர் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் நலனில் அக்கறை : லிபரல் கட்சி ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு விளங்கியது .
இதன் அடையாளமாக போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு கனடாவில் நுழைய அனுமதி இல்லை என பிரசாரம் செய்தது. இது கணிசமாக வாழும் தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஈழத்தமிழர்கள் 6 பேர் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனர். இதில் ஸ்காபரோ ரூச்பார்க் என்ற தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இவர் பழம்பெரும் ஈழ தமிழ் தலைவரான ஆனந்தசங்கரியின் மகனாவார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக