3வயதில் அகதியாக இலங்கையில் இருந்து தனது
பெற்றோருடன் நார்வே சென்ற ஈழ தமிழ்பெண் ஒருவர், அந்த நாட்டின் தலைநகர்
ஆஸ்லேவின் துணைமேயராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில்
கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொழிலாளர் கட்சியின்
ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும்
கம்சாஜினி குணரத்தினம் அந்த நாட்டு தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு
தனது தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
நார்வே நாட்டின் பல்வேறு சமூக மற்றும்
அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு
பயணமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு
நோர்வேயில் உள்ள உடோயா என்ற தீவுப்பகுதியில் நடைபெற்ற அந்நாட்டின்
தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கம்சாஜினி கலந்துகொள்ள சென்றார்.
எதிர்பராதவிதமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே
இடியேயான பிரச்னையில் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த
தாக்குதலில் 72 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில்
படுகாயம் அடைந்த இவர் கடலில் குதித்து நீந்தியவாறு கடற்கரையை அடைந்த
பின்னர் மருத்துவமனையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் ஈழ தமிழ் பெண்
கம்சாஜினி குணரத்னம்,
அடுத்து தொழிலாளர் கட்சியின் கூட்டணி கட்சியான
இடதுசாரி சமூக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கம்சாஜினி பல்வேறு அரசியல்
பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவந்துள்ளார். இந்நிலையில், கூட்டணி
கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஓஸ்லோ நகரின் துணை மேயராக
நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஓஸ்லோ நகரின் மேயரான மரியன்னே
போர்கனுடன் இணைந்து கம்சாஜினி நகர நிர்வாக பணிகளை கவனித்து வருவார்.
உயிர்பிழைத்தது
குறித்து சொல்லும்போது, ‘தீவிரவாதிகளால் சுட்டு இறப்பதை விட தண்ணீரில்
மூழ்கி சாவது மேல் என்ற துணிச்சல் தான் தன்னை உயிர்பிழைக்க வைத்தாக
தெரிவித்திருந்தார். அப்படி போராதியதன் விளைவுதான் இப்போது தற்போது 27
வயதில் தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கம்சாஜினி
குணரத்னம்.
இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான இவர்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக தனது பெற்றோருடன் தனது 3
வயதில் அகதியாக நார்வேயில் குடியேறினார். ஒரு அகதியாய் சென்ற தமிழச்சி ஒரு
நாட்டின் துணைமேயராக உருவெடுத்திருப்பது தமிழரிடையே உற்சாகத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக