வாடகை
தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு
பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள உச்ச
நீதிமன்றம், இதுதொடர்பான சட்ட திருத்தங்களை உருவாக்கவும் அறிவுறுத்தியது.
வாடகை தாய் முறையை இன்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் இதே உச்ச
நீதிமன்றம் 2008-ல், வாடகை தாய் முறையில் நடக்கும் வணிகத்தில் பிரச்னை
இல்லை என்று சொல்லியது. மேலும் இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், ‘’
குறைந்தது 3 முறை ஒரு பெண் வாடகை தாயாக இருக்க முடியும். கர்ப்ப காலத்தில்
வரும் எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மாதம் 3 ஆயிரம்
கொடுக்கவேண்டும். குழந்தை பிறந்த பின் குறைந்தபட்சம் ரெண்டரை லட்சம் வாடகை
தாய்க்கு கொடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது.
ஆனால் குஜராத்தில், ஒரு பெண் குறைந்தது 6 முறையாவது வாடகை தாயாக கருவை சுமக்கிறாள். இதில் நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், குழந்தை எந்த சிரமமும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பம். வாடகை தாய் கருவுற்ற சமயம் பெற்றோர்கள் கருத்துவேறுபாட்டினால் பிரிந்து விட, குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற சிக்கல் இருக்கிறது. இடையில் கருச்சிதைவு ஏற்பட்டால், வாடகை தாயின் நிலை உள்ளிட்ட பல சிக்கல்கள் இதில் இருக்கின்றன.
வாடகை தாய் முறைக்கு 2013-ல் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தனர். ஆனா, இந்த வணிகத்துக்கு எதிரான முழுமையான மற்றும் தெளிவான சட்டம் இதுவரை கொண்டு வரப்படவில்லை. இதை பயன் படுத்திதான் 40 % வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
கடந்த வருடங்களில் குஜராத்தில் சுமார் 30,000 ஆயிரம் குழந்தைகளை வெளிநாட்டவருக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் பெண்கள். இதில் பல லட்சம் டாலர்கள் பணம் குஜராத்துக்கு வந்துள்ளது. ஆனால் இதில் பயன் அடைந்தது மருத்துவமனைகளும், புரோக்கர்களும்தான். சில ஆயிரங்களை மட்டுமே வாடகை தாய்க்கு கொடுத்துள்ளனர்.
குழந்தை இல்லாதவர்களை இந்த சமூகம் அமைதியாக வாழவிடுவது கிடையாது என்கிறார், சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி.
“ குழந்தை தமக்கு அவசியம் என்று வரும்போது, குழந்தை இல்லாதவர்களுக்கு வாடகை தாய் நிச்சயம் மாற்று மருந்துதான். இது அறிவியலின் வெற்றி, வரம்தான். ஆனால் அறிவியல் தந்த இந்த வரம் இந்தியாவில் இப்போது ஒரு வணிகக் களமாக மாறியிருப்பது கண்டனத்திற்குரியது.
வாடகை தாய் என்பதை உலகில் 26 நாடுகளில் தடை செய்தும் இருக்கிறார்கள். இந்தியாவில் அதுவும் குறிப்பாக குஜராத்தில், இந்த வணிகம் மனித உரிமை மீறல்கள் வரை சென்று இருக்கிறது. வட மாநிலங்களில் வறுமை நிலையில், படிப்பு அறிவு இல்லாத பெண்களை இதற்கு குறிவைக்கிறார்கள்.
அவர்களுக்கு வெறும் 10 , 15 ஆயிரங்களை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
பிறந்த குழந்தையை பார்க்கவும் விடுவதில்லை. 10% சதவீதம் இந்தியர்கள்
குழந்தையின்மை சிக்கலில் தவிக்கிறார்கள். இந்தியாவில் வாடகை தாய்க்கான
முறைப்படுத்தப்பட்ட சட்டம் எதுவும் இல்லாததாலும் குறைந்த விலை என்பதும்தான்
இந்தியவை மற்ற நாட்டினர் குறிவைக்கிறார்கள்.
அதுவும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் இங்கு வந்து, குழந்தை பெற்று செல்கிறார்கள். வாடகை தாய்க்கு வரும் உடல் நலக் கோளாறுகளை யாரும் இங்கு கவனிப்பதில்லை. அவர்களுக்கென ஒரு அங்கீகாரம் இங்கு இல்லை.
வாடகைத் தாய் இங்கு சுரண்டப்படுகிறார்கள். அந்த நிலை மாறணும். இதை வைத்து பணம் பார்க்கும் புரோக்கர்கள், மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதற்கு தெளிவான சட்டம் வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். ஆனா இந்த நிலை தொடரும் என்றால் தடை செய்வதே சிறந்ததாக இருக்கும்.
இதுபற்றி பொதுநல மருத்துவர் புகழேந்தி, ‘’ மலட்டுத்தன்மை என்பது உலகளவிலான பிரச்னையாக உள்ளது. அதுக்கு காரணம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த உணவுகள், செல்போன் ரேடியசன், மாசுகள் போன்ற பல காரணங்களில் ஹார்மோன்ஸ் கோளாறுகள் வருவதுதான் பொதுவான காரணம். ஆண்கள் ரொம்ப இறுக்கமான ஆடை அணிவதால் உடலில் சூடு அதிகமாகி விந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது.
மாறிவரும் உணவு பழக்கத்தினாலும் இந்த பிரச்னை இப்போது அதிகமாகிறது. சுவாசிக்கும் காற்றில் குரோமியம், கேட்மியம் போன்றவை கலந்திருப்பதாக கூட ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதுவும் குழந்தையின்மைக்கு காரணம் என சொன்னார்கள்.
நம்மளவில் வாழ்வியல் மாற்றத்தை கொண்டுவந்தாலும், சுற்றுச் சூழல் மாசு
காரணமாக வரும் கேடும் நம்மை தாக்கவே செய்கிறது. இந்தியாவில்
கண்டுபிடிக்கும் மருந்துகளை கூட விதிமுறைகளை மீறிதான் டெஸ்ட் செய்வாங்க.
இதுபோன்று புது மருந்தை சோதிப்பதில் முறைகேடு செய்வது சீனாதான்
முதலிடத்தில் இருந்து வந்தது. இன்று இதிலும் இந்தியாதான் முதல் இடம்.
இங்குள்ள அரசியல் சூழலும், மருத்துவ சூழலும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக
இருப்பதனால்தான் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
இப்போது எல்லாருக்கும் ஆரோக்கியம் என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஒரு
பெண், குழந்தை பெற்றதும் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகிறாள். இந்த நிலையில்
சத்துகள் இல்லாமல். வாடகை தாய் மூலம் பல குழந்தைகள் பெற்று எடுக்கும்போது,
அந்த பெண்களுக்கு ரத்த சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற
பிரச்னைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
வாடகைத்தாய் விவகாரத்தில், மத்திய அரசும் நீதிமன்றமும் தங்கள் கவனத்தை திருப்பவேண்டிய நேரமிது!
- கே. அபிநயா vikatan.com/news/article.php?aid=53843
ஆனால் குஜராத்தில், ஒரு பெண் குறைந்தது 6 முறையாவது வாடகை தாயாக கருவை சுமக்கிறாள். இதில் நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், குழந்தை எந்த சிரமமும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பம். வாடகை தாய் கருவுற்ற சமயம் பெற்றோர்கள் கருத்துவேறுபாட்டினால் பிரிந்து விட, குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற சிக்கல் இருக்கிறது. இடையில் கருச்சிதைவு ஏற்பட்டால், வாடகை தாயின் நிலை உள்ளிட்ட பல சிக்கல்கள் இதில் இருக்கின்றன.
வாடகை தாய் முறைக்கு 2013-ல் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தனர். ஆனா, இந்த வணிகத்துக்கு எதிரான முழுமையான மற்றும் தெளிவான சட்டம் இதுவரை கொண்டு வரப்படவில்லை. இதை பயன் படுத்திதான் 40 % வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
கடந்த வருடங்களில் குஜராத்தில் சுமார் 30,000 ஆயிரம் குழந்தைகளை வெளிநாட்டவருக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் பெண்கள். இதில் பல லட்சம் டாலர்கள் பணம் குஜராத்துக்கு வந்துள்ளது. ஆனால் இதில் பயன் அடைந்தது மருத்துவமனைகளும், புரோக்கர்களும்தான். சில ஆயிரங்களை மட்டுமே வாடகை தாய்க்கு கொடுத்துள்ளனர்.
குழந்தை இல்லாதவர்களை இந்த சமூகம் அமைதியாக வாழவிடுவது கிடையாது என்கிறார், சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி.
“ குழந்தை தமக்கு அவசியம் என்று வரும்போது, குழந்தை இல்லாதவர்களுக்கு வாடகை தாய் நிச்சயம் மாற்று மருந்துதான். இது அறிவியலின் வெற்றி, வரம்தான். ஆனால் அறிவியல் தந்த இந்த வரம் இந்தியாவில் இப்போது ஒரு வணிகக் களமாக மாறியிருப்பது கண்டனத்திற்குரியது.
வாடகை தாய் என்பதை உலகில் 26 நாடுகளில் தடை செய்தும் இருக்கிறார்கள். இந்தியாவில் அதுவும் குறிப்பாக குஜராத்தில், இந்த வணிகம் மனித உரிமை மீறல்கள் வரை சென்று இருக்கிறது. வட மாநிலங்களில் வறுமை நிலையில், படிப்பு அறிவு இல்லாத பெண்களை இதற்கு குறிவைக்கிறார்கள்.
அதுவும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் இங்கு வந்து, குழந்தை பெற்று செல்கிறார்கள். வாடகை தாய்க்கு வரும் உடல் நலக் கோளாறுகளை யாரும் இங்கு கவனிப்பதில்லை. அவர்களுக்கென ஒரு அங்கீகாரம் இங்கு இல்லை.
வாடகைத் தாய் இங்கு சுரண்டப்படுகிறார்கள். அந்த நிலை மாறணும். இதை வைத்து பணம் பார்க்கும் புரோக்கர்கள், மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதற்கு தெளிவான சட்டம் வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். ஆனா இந்த நிலை தொடரும் என்றால் தடை செய்வதே சிறந்ததாக இருக்கும்.
இதுபற்றி பொதுநல மருத்துவர் புகழேந்தி, ‘’ மலட்டுத்தன்மை என்பது உலகளவிலான பிரச்னையாக உள்ளது. அதுக்கு காரணம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த உணவுகள், செல்போன் ரேடியசன், மாசுகள் போன்ற பல காரணங்களில் ஹார்மோன்ஸ் கோளாறுகள் வருவதுதான் பொதுவான காரணம். ஆண்கள் ரொம்ப இறுக்கமான ஆடை அணிவதால் உடலில் சூடு அதிகமாகி விந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது.
மாறிவரும் உணவு பழக்கத்தினாலும் இந்த பிரச்னை இப்போது அதிகமாகிறது. சுவாசிக்கும் காற்றில் குரோமியம், கேட்மியம் போன்றவை கலந்திருப்பதாக கூட ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதுவும் குழந்தையின்மைக்கு காரணம் என சொன்னார்கள்.
வாடகைத்தாய் விவகாரத்தில், மத்திய அரசும் நீதிமன்றமும் தங்கள் கவனத்தை திருப்பவேண்டிய நேரமிது!
- கே. அபிநயா vikatan.com/news/article.php?aid=53843
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக