செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சங்கரராமன் கொலை புகழ் தாதா அப்பு மரணம்.காஞ்சி சங்கராச்சாரி இன்னும் அனுதாபம் தெரிவிக்கல?

சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவராக திகழ்ந்தவரும், சங்கரராமன் கொலையில் கூலிப்படையை ஏவியதாக குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவருமான அப்பு ஆந்திராவில் மரணமடைந்தார். எலும்பு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் அப்பு. .. புற்றுக்கு நோய்க்குப் பலியானார் சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தவர் அப்பு. 59 வயதான இவர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானார். சங்கரராமனைக் கொலை செய்யத் தேவையான கூலிப்படையை இவர்தான் அனுப்பி வைத்தார் என்பது போலீஸ் குற்றச்சாட்டு. நீண்ட காலமாக நடந்து வந்த கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவருமே விடுவிக்கப்பட்டனர்.
அப்புவும் விடுதலையானார். சங்கரராமன் கொலைக்குப் பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரக் கட்டைக் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் அப்புவைக் கைது செய்தனர். இந்த நிலையில் ஜனவரி 3ம் தேதி உடல் நல பாதிப்பு காரணமாக காக்கிநாடா மருத்துவமனையில் அப்புவை போலீஸார் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை மரணமடைந்தார்.
எலும்பு புற்றுநோய் முற்றிய காரணத்தால் அவர் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர் அப்புவின் உண்மையான பெயர் கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர். அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி் கொண்டு ரவுடியானார். பின்னர் ஹைடெக் தாதாவானார். கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டன. சங்கரராமன் கொலை வழக்கு தவிர ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, சென்னகேசவலு கொலை வழக்கு ஆகியவையும் இவர் மீது போடப்பட்டிருந்தன.
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: