ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க
முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அந்த கூட்டணியிலிருந்து
வெளியேற, தெலுங்கு தேசம் திட்டமிட்டு உள்ளது.
ஆந்திராவில், முதல்வர்
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு
தேசம் கட்சி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம்
வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த, அசோக் கஜபதி ராஜு, விமான போக்குவரத்துத்
துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், ஆந்திராவிலிருந்து
பிரிந்து, தனி மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர
ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., கட்சி ஆட்சி
நடக்கிறது. சமீபத்தில் டில்லி சென்ற சந்திரசேகர ராவ், பிரதமர்
நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, மத்திய அரசில்,
டி.ஆர்.எஸ்., சேரப் போவதாகவும், சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு, மத்திய
அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது, தெலுங்கு
தேசம் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தி கதையெல்லாம் டூப்பு பாஜகவின் சாயம் மோடியின் கவர்ச்சி எல்லாம் ஆம் ஆத்மியின் துடைப்பத்தால சுத்தமா போச்சு . இனி அங்க இருந்து ஒன்னும் புடுங்க முடியாது . இந்த நாயுடுகாரு பக்கா பிசிநேஸ்மன் இனி பாருங்க மூணாவது அணின்னு தூக்கி பிடிப்பாரு
இதுகுறித்து, தெலுங்கு தேசம் கட்சியின், எம்.பி., ரமேஷ் கூறியதாவது: ஆந்திராவிலிருந்து பிரிந்தது தான், தெலுங்கானா மாநிலம். டி.ஆர்.எஸ்., எங்களின் பிரதான எதிர்க்கட்சி. இந்நிலையில், எங்களுடன் கூட்டு வைத்துள்ள பா.ஜ., மற்றொரு பக்கம், டி.ஆர்.எஸ்., கட்சியுடனும் கூட்டணி வைக்க முயற்சிப்பது என்ன நியாயம்; தே.ஜ., கூட்டணியில் டி.ஆர்.எஸ்., சேர்ந்தால், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக