ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

Chennai சர்வதேச முதலீட்டு முன்னோட்ட மாநாடு படுதோல்வி! அவிங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லியாம்! கமிசன் கட்டுபடியாகாதோ?

சென்னை:மே மாதம் சென்னையில் நடக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, சென்னையில் நேற்று நடந்த முன்னோட்ட மாநாட்டிற்கு, தொழில் துறையினர், பெரும்பாலானோர் வரவில்லை. தொழில் துறையினரிடம் பெருமளவு வரவேற்பு இல்லாததால், தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில், சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் வகையில், மே, 23, 24ம் தேதிகளில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, வர்த்தக மையத்தில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த, தமிழக அரசு, முடிவு செய்துள்ளது. இதற்காக, முதலீட்டாளரின் கருத்து மற்றும் ஆலோசனைகள் கேட்க, அரசு சார்பில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, தனியார் ஓட்டலில், முதலீட்டாளர் மாநாடு முன்னேட்ட நிகழ்ச்சி, நேற்று, நடந்தது. முதல்வர் பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் தங்கமணி, தலைமை செயலர் ஞானதேசிகன், தொழில் துறை செயலர் சங்கர் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். நமக்கு வாய்த்த  அடிமைங்க  சொல்லியிருக்கிற சாதனைகள் எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழிலகங்களால் வந்தவை


ஒப்பந்தம் இல்லை:இந்த நிகழ்ச்சியில், மகிந்திரா, 5,000 கோடி; எம்.ஆர்.எப்., 4,000 கோடி என, மொத்தம் ஏழு நிறுவனங்கள், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, முதலீடு செய்யும் வகையில், ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருந்தன. சென்னை அடுத்த ஒரகடத்தில், யமஹா நிறுவனம், 1,500 கோடி ரூபாயில், தொழிற்சாலை அமைத்துள்ளது. இதை, பன்னீர்செல்வம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், துவக்கி வைக்க திட்டமிடப்பட்டது. முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க, 250 தொழில் அதிபர், 35 வெளிநாட்டு தூதர், 15 தொழில் கூட்டமைப்பு என, 300 பேருக்கு, தொழில் துறை சார்பில், அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், முன்னோட்ட நிகழ்ச்சியில், ஒப்பந்தம் கையெழுத்து, ஆலை துவக்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்காததால், 100க்கும் குறைவான முதலீட்டாளர் மட்டும் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் கோடி:விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழகத்தில், ஹூண்டாய்,போர்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்துள்ளன. இந்தியாவில், மோட்டார் வாகனம் மற்றும் மின் சாதன பொருட்கள் உற்பத்தியில், சென்னை, முக்கிய மையமாக திகழ்கிறது. தமிழகத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதி, நன்கு உள்ளதால், தொழில்முதலீட்டை, அதிகளவில் ஈர்த்து வருகிறது. இந்தியாவில், அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.சென்னையில், மே, 23, 24ம் தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், தமிழகம், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு, முதலீட்டை ஈர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய அரசே காரணம்: தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:தமிழகத்தில், ஒரு நிமிடத்திற்கு, மூன்று கார்; 92 வினாடிக்கு, ஒரு வர்த்தக வாகனம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த, 'நோக்கியா' ஆலை முடப்பட்டதற்கு, மத்திய அரசு, தான் காரணம். இந்தியாவில், 2011 முதல், 2014, டிச., வரை, வெளிநாட்டு முதலீட்டை அதிகளவில் ஈர்த்ததில், தமிழகம், மூன்றாவது இடத்தில் உள்ளது. இதை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கான, 'லோகோ' அறிமுகம் செய்யப்பட்டது.


இருக்கை அகற்றம்:முதலீட்டாளர் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்த அரங்கில், 300 இருக்கைகள் போடப்பட்டன. பலர் வராததால், முன் வரிசை உட்பட, ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. உடனே, பள்ளி கல்வி துறை செயலர் சபிதா, ஓட்டல் ஊழியர்களை அழைத்து, பின் வரிசை நாற்காலிகளை அகற்ற உத்தரவிட்டார். பின், வரிசையில் அமர்ந்திருந்த, 'சிப்காட்' மேலாளர் மதுமதி உள்ளிட்ட அதிகாரிகளிடம், முன் வரிசையில் சென்று அமருமாறு, சபிதா கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு, உணவு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலும், பலர், வராததால், அரசுக்கு, பல லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: