ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

Sureshbai Patel தாக்கப்பட்டது அமெரிக்க இந்திய உறவில் தாக்கம்?


குஜராத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல் (57). இவர் அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வெளியே ‘வாக்கிங்’ சென்ற போது அவரை வழிமடக்கிய போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆங்கிலத்தில் பேச தெரியாமல் தவித்த அவரை 2 போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதியை போல தாவி மடக்கிபிடித்து கீழே தள்ளி தாக்கினர். அதில் காயம் அடைந்த அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களும், மத்திய அரசும் கடும் கண்டனம் தெரிவித்தன. இன வெறி தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து சுரேஷ்பாய் படேலை தாக்கிய போலீஸ் அதிகாரி எரிக்பார்கர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ரூ.63 ஆயிரம் பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ்பாய் படேலுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதற்காக ரூ,75 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவரது சிகிச்சை செலவுக்கு ரூ.75 லட்சத்தை போலீசார் வழங்க வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: