வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஜெயா வழக்கில், அரசியல் பேச வேண்டாம் ! வக்கீல்களுக்கு வகுப்பெடுக்கும் நீதிபதி ?

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தொடர்பாக, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்டியல் வைத்து பணம் வசூலித்தது பற்றியும், சர்க்காரியா கமிஷன் பற்றியும் நேற்று விவாதம் நடந்தது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீது, 16வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. சசிகலாவின் வக்கீல் பஸந்த் வாதிட்டார்.சிகலா வக்கீல்: வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதாவின் பணம், 32 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டதாக கூறும் போலீசார், அதற்கான ஆதாரங்களை, சமர்ப்பிக்கவில்லை.தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வக்கீல் சரவணன்: நமது எம்.ஜி.ஆர்., நாளிதழுக்கு, 15,???, 18,??? ரூபாய் என, 'டெபாசிட்' வசூலித்தனர். இதில், 14 கோடி ரூபாய் வசூலானது. அந்த பணத்தில், 32 கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின், 44வது பிறந்த நாளுக்கு, 'டிடி' யாக, பணம் வசூல் செய்யப்பட்டது.நமது எம்.ஜி.ஆர் எல்லாம் சந்தா கட்டவே ஆள் இல்லை...மிஞ்சி மிஞ்சி போனா தமிழ்நாடு முழுக்கவே அந்த நமது எம்.ஜி.ஆர் வாங்கறது இருநூற் பேறு கூட இருக்காது...அதுல எப்படி கோடி கணக்குல பணம் வரும் ? ஒரு சந்தாவே அந்த காலகட்டத்தில் நூறு ரூபாய் கிட்ட தான்...அதுல இவங்களுக்கு கோடி கணக்குல பணம் வந்ததாமா?


(இடைமறித்த) ஜெ., வக்கீல் நவநீதகிருஷ்ணன்: அவர்களின் தலைவர்(கருணாநிதி) பிறந்த நாளின்போது, உண்டியல் வைத்து பணம் வசூல் செய்வார்.

சர்க்காரியா கமிஷன்: அன்பழகன் வக்கீல்: கருணாநிதி பிறந்த நாளில், உண்டியல் வைத்து வசூல் செய்யும் பணத்தை, ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு கொடுத்து விடுவார்.

நீதிபதி குமார் (அன்பழகன் வக்கீல் சரவணனை பார்த்து): உங்கள் மீது, எந்த புகாரும் இல்லையா?

அ.தி.மு.க., எம்.பி., நவநீத கிருஷ்ணன்: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

அன்பழகன் வக்கீல்: அந்த கமிஷனில், கருணாநிதி மீது எந்த ஊழல் புகாரும் இல்லை, என, அறிக்கை வழங்கப்பட்டது.

நீதிபதி (குறுக்கிட்டு): இது, நீதிமன்றம். இதை அரசியல் மேடையாக்காதீர்.

சசிகலா வக்கீல்: அரசியல் பேச வேண்டாம்; வழக்கு பற்றி மட்டும் பேசுவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.



இன்று விசாரணை:

கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனுவில், அரசு வக்கீல் பவானி சிங் ஆஜராக கூடாது என்று, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில், வக்கீல் சரவணன் தாக்கல் செய்த அப்பீல் மனு, நீதிபதிகள் மஞ்சுநாத், சுஜாதா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அன்பழகன் தரப்பில், கர்நாடகா உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் நாகேஷ் வாதாட உள்ளார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: