ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா, டிஜிட்டல் திரை மூலம் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான
ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம்
சட்டசபைத் தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் வளர்மதி நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதுதவிர, தி.மு.க., - பா.ஜ., - மா.கம்யூ., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும்
களத்தில் உள்ளனர். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
என்ற துடிப்புடன், தேர்தல் பணிகளை அ.தி.மு.க., வினர் துவக்கி உள்ளனர்.
தி.மு.க.,வினர், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டு களை விட, கூடுதல் ஓட்டுகளை
பெற்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன், களம் இறங்கி உள்ளனர். நான் கூட முதல்ல நினைச்சேன் இந்த அம்மா ஏதோ வசமா இந்த கும்பல்கிட்ட
மாட்டிகிச்சு..ஏதோ ஒரு ஆதாரம் செமையா சிக்கிகிச்சு அதான் அந்த கும்பல்
இந்தம்மாவ ஆட்டி வக்குதுன்னு நினைச்சேன்....இப்படி தான் ராதா அண்ணனும்
ஏமாந்து அந்தம்மாவுக்கு ஜால்ரா தட்டிகிட்டு இருந்தார் ரொம்ப நாள்
முன்னாடி....போக போக தான் தெரிஞ்சது இந்தம்மா பினாமிகளை உருவாக்கி வச்சு
இருக்குது...சசிகலா நட்டுவுடன் இருந்தால் ரெண்டும் மொத்தமா சுருட்டிகிட்டு
இந்தம்மாவ காலி பண்ணிட்டு போயிடும்னு ரெண்டையும் பிரிச்சு இந்தம்மா அது மேல
ஆதிக்கம் செலுத்திகிட்டு இருக்குன்னு...ஆமா இத்தனை ஆயிரம் கோடிய
வச்சுக்கிட்டு யாருக்காக? பணம் ஒரு போதை ..கட்டுமரம் மாதிரி கட்டிய மேல
வைக்கிற வரைக்கும் அந்த போதை தேவை படுகிறது...
இரு கட்சியினரும் முழுவீச்சில் களம் இறங்கி உள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்று, ஜாமினில் வெளி வந்துள்ள ஜெயலலிதா, போயஸ் கார்டனை விட்டு எங்கும் செல்லாமல் உள்ளார். எனவே, அவர் பிரசாரத்திற்கு வரும் திட்டம் இல்லை. முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் பிரசாரத்திற்கு சென்றால், இடைத்தேர்தல் வெற்றி அவரை சென்றடையும் என்பதால், அவரை பிரசாரத்திற்கு அனுப்பவும், அ.தி.மு.க., தலைமை தயங்குகிறது. எனவே, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து பிரசாரம் செய்ய, அவரது பிரசாரத்தை, ஸ்ரீரங்கம் தொகுதியின் ஏழு இடங்களில், பிரமாண்ட டிஜிட்டல் திரையில், நேரடியாக ஒளிபரப்பு செய்ய, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், சிக்கல் ஏற்படும். எனவே, ஜெயலலிதா பிரசாரத்தை பதிவு செய்து, திரையில் ஒளிபரப்பலாம் என, தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. எந்த முடிவாக இருந்தாலும், டிஜிட்டல் திரை மூலம், ஜெயலலிதா பிரசாரத்தை ஒளிபரப்பு செய்யும் திட்டம் முடிவாகி உள்ளது. இதன்மூலம், ஸ்ரீரங்கம் தொகுதி வெற்றியை, ஜெயலலிதாவின் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றியாக மாற்ற, அ.தி.மு.க., நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். எனவே, பிப்ரவரி முதல் வார இறுதியில், ஜெயலலிதா டிஜிட்டல் பிரசாரம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில், எல்லாமே ஜெயலலிதா தான். அவர் பேரை சொல்லித் தான், ஒட்டுமொத்த கட்சியும், ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறது. இந்நிலையில், கட்சி யின் வெற்றிக்காக, அவரும் தன்பங்கை செலுத்த வேண்டும் என, நினைக்கிறார். இதற்காக, டிஜிட்டல் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இவ்வாறு, அந்த வட்டா ரத்தினர் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தினர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில், எல்லாமே ஜெயலலிதா தான். அவர் பேரை சொல்லித் தான், ஒட்டுமொத்த கட்சியும், ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறது. இந்நிலையில், கட்சி யின் வெற்றிக்காக, அவரும் தன்பங்கை செலுத்த வேண்டும் என, நினைக்கிறார். இதற்காக, டிஜிட்டல் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இவ்வாறு, அந்த வட்டா ரத்தினர் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக