ஞாயிறு, 25 ஜனவரி, 2015

கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் மீனாகுமாரி கமிட்டி அறிக்கை!


இந்தியாவில் புதிய ஆழ்கடல் மீன்பிடி கொள்கையை பரிந்துரை செய்வதற்காக டாக்டர் மீனாகுமாரி தலைமையில் மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிக்கை சட்ட வடிவமாக மாற்றப்பட உள்ளது. இந்த நிலையில் மீனா கமிட்டி அறிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி அனைத்திந்திய மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் மா.அ.ஜெயகுமார் தலைமை தாங்கினார். தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனா மாமிக்கு  மீனவர் வாழ்வு வரலாறு ஏதாவது தெரியுமா? முதல்ல மீனாமாமி  மீன் சாப்பிடுவாய்ங்களா ?அதை சொல்லுங்க?


ஆர்ப்பாட்டத்தின்போது, மா.அ.ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள், கட்டுமரங்கள், பைபர் படகுகள், நாட்டு படகுகள், வல்லங்கள், விசைப்படகுகள் அனைத்தும் 12 நாட்டிக்கல் மைல் பகுதிக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்று மீனா குமாரி கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிட வேண்டும்’ என்றார். dailythanthi.in

கருத்துகள் இல்லை: