ஞாயிறு, 25 ஜனவரி, 2015

11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தை தாங்கும் அதிசய வாலிபர்


ஹரியானாவில் 11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தை தாங்கும் அதிசய வாலிபர் சாதனை நாயகனாகி உள்ளார்.
ஹரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபர் தீபக் ஜங்ரா என்பவர்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது கையில் இருந்த ஸ்குரு டிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால் எனக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது.
மற்றொரு சமயம் டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டேன். எனக்கு ஏதும் நிகழாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த மின்சாரத்தோடு விளையாடத் தொடங்கினேன

பின்னர் தொடர்ந்து வேறு வேறு வோல்டேஜூகள் கொண்ட பல்வேறு மின் சாதனங்களை தொட்டுப்பார்த்தான் ஒருநாள், தன்னால் எவ்வளவு மின்சாரத்தைதான் தாங்க முடியும் என்று சோதனை செய்ய விரும்பி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி 11000 வோல்ட் மின்சாரத்தை தொடச்சென்றேன்.< இதனால் எனது தாய் உட்பட அங்கு கூடிய கிராம மக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக எண்ணி கீழே இறங்கும் படி சத்தம் போட்டனர். ஆனால் 11000 வோல்ட் மின்சாரத்தை தொட்ட பிறகும் உயிரோடு இருப்பதை பார்த்தபின் மகிழ்ச்சியில் பொங்கினர்” என்றார் ஆனால் மருத்துவர்களோ ஜங்ராவை எச்சரித்துள்ளனர். இது ஆபத்தானதென்றும் அவரின் செய்கை அவருக்கு பல்வேறு குறைபாடுகளை உண்டாக்குமென்றும் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: