வியாழன், 5 டிசம்பர், 2013

ஆசாராம் பாபுவின் மகன் பிடிபட்டார் ! 6 செல்போன்… 32 சிம்கார்ட் சகிதம் 70 நாட்கள் ஒழித்திருந்தவரை அமுக்கிய போலீஸ்!!


சண்டிகர்: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசராம்பாபுவின் மகன் நாராயணசாய் செவ்வாய்கிழமை இரவு சண்டிகர் அருகே கைது செய்யப்பட்டார். எலியை பூனை துரத்துவதைப் போல டெல்லி - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் 72 மணிநேரம் விரட்டிய போலீசார் நாராயண சாயை கைது செய்துள்ளனர். அப்போது அவர் போர்டு எகோ ஸ்போர்ட் காரில் சிங் போல வேடமிட்டு சென்று கொண்டிருந்தனர். அவருக்கு சமையல் செய்ய ஒரு சிறுவனும் உடன் இருந்தான். கடந்த 2 மாதகாலமாக போகும் வழியெங்கும் கார்களை மாற்றி உபயோகித்து வழியிலேயே சமைத்து சாப்பிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளான்.
கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள், ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் செய்தனர்.
இதில், 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த சகோதரி புகாரில் தெரிவித்திருந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது தன்னை நாராயண் சாய் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைய சகோதரி புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் ஏற்கனவே சிறையில் இருந்த ஆசாராம் பாபுவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆனால், அவரது மகன் நாராயண் சாய் தலைமறைவானார்.
தலைமறைவு வாழ்க்கையின் போது 6 செல்போன்களையும், 32 சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளான் சாய். அவனைப் பற்றிய துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தனர் போலீசார். 22 போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று லூதியானா பகுதியில் முகாமிட்டனர். சாய் அங்குதான் இருப்பதாக உறுதியான தகவல் தெரிந்த உடன் டிசம்பர் 2ம் தேதியே 10 போலீசார் நெடுஞ்சாலைப் பகுதியை இஞ்ச் இஞ்ச் ஆக அலசத் தொடங்கினர்
சிங் வேடமிட்டு உலா வந்த நாராயணசாயை கடைசியில் நள்ளிரவு நேரத்தில் டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது உதவியாளரும், டிரைவருமான ஹனுமனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 70 நாட்கள் போலீசாருக்கு போக்கு காட்டி வாழ்ந்து வந்த நாராயண சாயின் தலைமறைவு வாழ்க்கை செவ்வாய் நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது
முழுவதும் பயணத்திலேயே இருந்த சாய், பல கார்களை மாற்றியுள்ளான். டொயாட்டோ, ஸ்விப்ட், போர்ட் எக்கோ ஸ்போர்ட் என வழியெங்கும் பல கார்களில் வலம் வந்ததாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளான். கைதுக்குப் பின்னர் சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: