புதன், 4 டிசம்பர், 2013

கேரள அரசு அதிர்ச்சி : பேஸ்புக்கில் கைதிகள் வெளியிட்ட படம்


திருவனந்தபுரம்: கோழிக்கோடு சிறைக்குள் இருக்கும் கொலை குற்றவாளிகள் 6 பேர், செல்போனில் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோழிக்கோட்டை சேர்ந்தவர் டி.பி.சந்திரசே கர். மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி ஆர்.எம்.பி. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனால், அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு பைக்கில் வீட்டுக்கு சென்ற சந்திரசேகரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. 
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கிர்மாணி மனோஜ், கொடிசுனி, முகம்மது ஷாபி, சிஜித், அனூப், ஷினோஜ் ஆகிய 6 பேர் உட்பட 20க்கும் மேற்பட்டோரை கைது செய் தனர். இவர்கள் அனை வரும் கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட 6 பேரும் சிறைக்குள் அதிநவீன செல்போனில் எடுத்த புகைப்படங்களை தங்களது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

அனைவரும் சிறை உடை அணியாமல் பர்முடா, டீ-சர்ட், காவி லுங்கி மற்றும் வண்ண, வண்ண உடைகளுடன் எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் சிலர் செல்போனில் பேசுவது போன்ற படங்களும் உள்ளன. இதுதொடர்பாக, கேரள உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கோழிக்கோடு சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: