வெள்ளி, 29 நவம்பர், 2013

தேஜ்பால் என்னை பலாத்காரம்தான் செய்தார்: சோமா சௌத்ரி பகிரங்க புகார்!


டெல்லி: டெஹல்கா நிறுவன ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் தம்மை 'சட்டப்படி' பலாத்காரம்தான் செய்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் பத்திரிகையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவு கிடைப்பது ஆறுதளிக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.
பெண்கள் தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள் மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்சனை. இதில் அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறு கேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரையறைகளைக் கொடுத்திருக்கிறதோ அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால் செய்தார்.
நான் என்னுடைய தாயார் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டுகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்ற பெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார் தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதி பாதுகாப்பையும் கூடத்தான்.
இந்த போராட்டம் வெகுசுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் தங்களைச் சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக்குவார்கள். இந்த விஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி .
இவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: