சனி, 30 நவம்பர், 2013

மோடியை பலூன் போல ஊதி காட்டும் internet மோசடிகள்


மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!
புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில் நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில் லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.
கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன் புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில் உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத் தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.
அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி! இந்த மோடி ஒரு டுபாக்கூர் ஆசாமி !சாயம் ஒரு நாள் வெளுக்கும் 

இத்தகைய அவ தூறுப் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருப்ப தாகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பிரபலப் படுத்துவதற் காக விடியவிடிய வேலை செய்வதாகவும், இதற் காக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருப் பது தெரியவந்தது என் றும் அவர் கூறுகிறார்.
மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஏராள மான முஸ்லீம்கள் கருத் துச் சொல்வது போல் தோற்றத்தை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் பெயரில் கணக்குகளைத் துவக்கி பின்னூட்டங்களை இடுவதாகவும் அனி ருத்தா தெரிவிக்கிறார்!
போலியான பெயர்களில்....
மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அய்.டி. அய் நிபுணர் ஒருவர் கூறும் போது, முக்கிய மாக முகநூல் மற்றும் டிவிட்டர் இதர உலக அளவிலான முக்கிய ஊடகங்கள் நடத்தும் பிளாக்குகளில் பல விதமான பெயர்களில் கணக்குகள் திறக்கப் படுகின்றன.
இதற்கு நிலை வட்டு (ஹார்டு டிஸ்குகள்) தேவையில்லை. மேலும் இண்டர்நெட்  வழங்கனில் (சர்வர் களில்) இருந்து பல போலியான பெயரில் அய்.பி முகவரிகள் உரு வாக்கி கொள்ளும் தொழில் நுட்பம் போன் றவை பிரபல இணைய தள கண்காணிப்பு சாத னங்களை ஏமாற்றிவிடும் ஆகையால் அவை எல் லாக் கணக்குகளையும் வேறு வேறு நபர்கள் அனுப்பியதாக காட்டிக் கொள்ளும்,
இதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட நபரைப்பற்றிய பதிவுகளை பலர் கூறுவ தாக எடுத்துக்கொண்டு தானாகவே அந்த இணையதளம் அந்த நபருக்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும், இந்த வகையில் தற் போது முன்னணி பத் திரிகையான டைம்ஸ், மோடியை இந்த வருடத் தில் சிறந்த மனிதர்கள் பட்டியலில் சேர்த்து வாக்குப்பதிவிற்கு விட் டுள்ளது. இதில் விழும் ஓட்டுக்களின் நம்பகத் தன்மை தற்போது கேள் விக்குறியாக உள்ளது.
தன்னைப்பற்றிய செய்தியை மறைக்கும் தொழில் நுட்பம்
தற்போது ஊடகங் களை விலைக்கு வாங்கி யதன் மூலம் மான்சி/மாதுரி என்ற பெண் ணைத்தொடரும் விவ காரத்தை மறைத்து, தெகல்கா விவகாரத்தை இரவும் பகலும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள்,   அதே போல் இணையதளத்திலும் மோடிக்கு எதிரான செய்திகளை தேடும் தளத்தில் இருந்து மறைத்து விடும் தொழில் நுட் பத்தையும் கையாண்டு வருகிறார்கள்,
எடுத் துகாட்டிற்கு குஜராத் மாநிலம் குறித்து தேடும் பட்சத்தில் மோடியின் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே அவர்களின் தேடலில் கிடைக்கும், உண்மை நிலவரங்கள் எதுவும் தேடுதளத்தில் கிடைக்காது. இது மிகவும் மோசமான ஓர் உதாரணமாகும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அய் டி நிபுணர் ஒருவர் கோப்ரா போஸ் டிற்கு தெரிவித்தார்.
இந்த வகையில் தான் உலகில் உள்ள முக்கிய பத்திரிகைகள் நரேந்திர மோடியை இந்தியாவின் முக்கிய நபராக தவறா கக் கணித்து விடுகிறது, மோடியின் டுவிட்டர் அக்கவுண்டில் இணைந் துள்ள லட்சக்கணக் கான நபர்கள் என்பது சில நூறுகள் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற போலி அய்.டி.கள் மூலம் ஒருவர் நூறு கணக்குகள் கூட உருவாக்கி மோடி யின் ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள லாம்.  சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி அலை வரிசையில் மோடியின் இந்த மோசடிதனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.viduthalai.in

கருத்துகள் இல்லை: