திங்கள், 25 நவம்பர், 2013

தினமலர் : 25 ஆயிரம் காமாட்சி விளக்குகள் அ.தி.மு.க.,வினர் சத்தம் இல்லாமல் சப்ளை ! பிரவீன் குமாருக்கும் ஒண்ணு கொடுங்க

சேலம்:ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்காக, கும்பகோணத்தில் இருந்து வரவழைத்த, 25 ஆயிரம் காமாட்சி விளக்குகளை, அ.தி.மு.க.,வினர் சத்தம் இல்லாமல் சப்ளை செய்து வருகின்றனர்.ஏற்காடு இடைத்தேர்தலுக்காக, அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு கண்காணிப்பதாக சொல்வதெல்லாம் பொய்யென இந்த பகிரங்கமாக பரிசு வழங்கும் செய்திகள் விளக்குகின்றன. அதிமுகவை எப்படியும் ஜெயிக்க வைத்து விட வேண்டுமென தேர்தல் அதிகாரிகள் மெனக்கெடுகிறார்கள். அதையும் மீறி சர்வாதிகார சக்திகளுக்கு ஏற்காடு மக்கள் சாவு மணி அடிப்பார்களா என்பது தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
ஆளும் கட்சிக்கு போட்டியாக, தி.மு.க.,வும் களம் இறங்கியுள்ளனர். ஆண் வாக்காளர்களுக்கு, கறி விருந்துடன் செலவுக்கு பணம் மற்றும் டாஸ்மாக் சரக்குகளை கொடுத்து திருப்திபடுத்தி வந்த அ.தி.மு.க.,வினர், தற்போது பெண்களின் ஓட்டுகளை வளைத்து போடுவதற்காக, கும்பகோணத்தில் இருந்து, 25 ஆயிரம் காமாட்சி விளக்குகள் வரவழைத்துள்ளனர்.

தி.மு.க., தலைவரின் மகள் கனிமொழி, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டதால், அக்கட்சியினர் அவருடன் சென்றுவிட்டனர். "கார்த்திகை மாத சென்டிமென்ட்' அடிப்படையில் விளக்குகள் வழங்கப்பட்டதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம் என்பதால், நாங்கள் கொடுக்கும் காமாட்சி விளக்குகளை, பெண்கள் வாங்க மறுப்பது இல்லை. அதை வாங்கும் பெண்கள், கைமாறு செய்ய வேண்டும் என்பதை மறந்து விடமாட்டார்கள். அதனால் தான், பெண் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைபடி, காமாட்சி விளக்குகள் வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. நவ., 27ம் தேதிக்குள் முதல்வரின் வருகைக்கு முன், அனைத்து பகுதிகளுக்கும் விளக்குகளை வழங்கி முடித்து விட தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது, என்று அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. dinamalar.com

கருத்துகள் இல்லை: