வெள்ளி, 29 நவம்பர், 2013

குழந்தையை கொடுத்து விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த முடிகண்டநல்லூரை சேர்ந்தவர் சித்திரன். இவரது மனைவி தமயந்தி. இவர்களது மகன் செல்வம் (25). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சித்ராவும் (பெயர் மாற்றம்) காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதில் சித்ரா கர்ப்பமடைந்தார். அதன்பின்னர், திருமணம் செய்ய செல்வம் மறுத்து விட்டார். சித்ரா அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் விசாரித்து வந்தனர். இவ்வழக்கு நாகை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 2009ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மரபணு சோதனையில் சித்ராவின் குழந்தை செல்வத்துக்கு பிறந்தது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன், சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த குற்றத்திற்காக செல்வத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், செல்வத்தின் பெற்றோர் சித்திரன், தமயந்தி ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை அடுத்து போலீசார் செல்வத்தை கடலூர் சிறையில் அடைத்தனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை: