வெள்ளி, 26 ஜூலை, 2013

தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற ரெயிலையே சாய்த்த சக பயணிகள் ! ஜப்பான் நாட்டில்

ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரெயில் நிலையத்தில் ரெயில் ஒன்று வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து
பயணிகள் கீழே இறங்கினர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கீழே இறங்கும் போது தவறி விழுந்தார். அவரது கால் பிளாட்பாரத்திற்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக் கொண்டது. அவரை சில பயணிகள் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே அங்கிருந்த சிலர் ரெயிலை லேசாக சாய்த்தால் தான் பெண்ணை மீட்க முடியும் என்றனர். உடனே அங்கிருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை சாய்க்கும் முயற்சியில் இறங்கினர். இந்த தகவல் அறிந்து மற்ற பெட்டிகளில் இருந்தவர்களும் கீழே இறங்கி அனைவரும் ஒன்று சேர்ந்து பெட்டியை லேசாக சாய்த்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீட்கப்பட்டார். உடனே அந்த பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, "தவறுதலாக கால் மாட்டிக்கொண்ட அந்த பெண்ணை காப்பாற்ற பயணிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து 32 டன் எடையுள்ள ரெயிலை அப்படியே லாவகமாக தூக்கி சாய்த்தனர். சுமார் 5 நிமிடம் மட்டுமே நடந்த இந்த மீட்பு பணியால் அந்த பெண் காப்பாற்றப்பட்டார்" என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: