வெள்ளி, 26 ஜூலை, 2013

வக்கீல்கள் ஆவேசம் கோர்ட்டுக்கு வந்த போலீசார் விரட்டியடிப்பு! நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்ற போலீசாரை வக்கீல்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் 40 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கோர்ட்டுக்கு வரவும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், பாளையங்கோட்டையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, சப்,இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், நாங்குநேரியில் இருந்தும் ரிமாண்ட் கைதி ஒருவர், போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு நின்ற வக்கீல்கள், அவர்களை கோர்ட்டிக்குள் நுழையவிடாமல் விரட்டினர்.
இதனால்,  கைதிகளை கோர்ட்டுக்கு ஆஜர்படுத்தாமல் போலீசார் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், எஸ்ஐ ஒருவர்,  பாளை காவல் நிலையத்தில் உள்ள தனது அறையில், ‘தன்னை வக்கீல்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம்‘ என்று போர்டு எழுதி வைத்தார். உயரதிகாரியின் உத்தரவின் பேரில் அந்த போர்டு அகற்றப்பட்டது.dinakaran.com

கருத்துகள் இல்லை: