வெள்ளி, 26 ஜூலை, 2013

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைமை! கொலை கொள்ளை வழிப்பறி ! முதலைமைச்சர் ஆலோசனை !

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அது தொடர்பான அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை
 வேலூரில் கடந்த 1-ந்தேதி இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனும், சேலத்தில் கடந்த 19-ந்தேதி தமிழக பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேசும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த செயலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வன்முறை குற்றங்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளி எறியப்பட வேண்டும் என்று கூறினார். அத்துடன் இந்த கொலைகள் பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை உடனடியாக அமைக்குமாறு தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அதுதொடர்பானவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முதல்-அமைச்சரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  வர வர இவிங்களுக்கு அம்மா மேல பயம் போயிடுச்சு ! மந்திரிங்களை பாத்து பயம்னா என்னன்னு கத்துங்க

கருத்துகள் இல்லை: