The Italian attorney general's office began a probe last year into
alleged unethical dealings by the company, which has now widened to
include the Rs 3,546-crore contract with India, reports from Italy say.
Finmeccanica subsidiary Augusta Westland signed the deal with the Indian
Air Force in 2010.
இத்தாலி பாதுகாப்பு நிறுவனமான பின்மெக்கானிக்காவிடமிருந்து 12 நவீன ரக
ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.4000 கோடிக்கு இந்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு
ஒப்பந்தம் செய்தது. அதில் 3 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே டெலிவரி
செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசின்
உயரதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய இத்தாலிய போலீசார்
பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கியுசெப்பு ஓர்சியை இன்று
கைது செய்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் இந்தியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதை
தெரிவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு
எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியிருந்தன.
இதையடுத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று
பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தியதில்
எந்த நிதி முறைகேடும் நடக்கவில்லை என்றும், இத்தாலி நிறுவன அதிகாரி கைது
செய்யப்பட்டதால், ஒப்பந்தத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்
பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக