பஞ்சாலைகளில்
டீன்ஏஜில் பெண்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு திருமணம்
நடைபெறும்போது, பஞ்சாலை நிர்வாகம் திருமண உதவி என்ற பெயரில் ஒரு தொகையை
அளிக்கிறது. இது
சுமங்கலி திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்
பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து கோவையில் நேற்று கருத்தரங்கு நடந்தது. சமூக ஒருங்கிணைப்பு
அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு சிஐடியு மாநில பொருளாளர்
குமார் தலைமை தாங்கினார்.>இதில்
கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன்(மார்க்சிஸ்ட்), ‘’கோவை, திருப்பூர், மதுரை,
திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகளில் சுமங்கலி
திட்டத்தின்கீழ் பெண் தொழிலா ளர்கள் பணியமர்த்தப் பட்டு,
கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்கப்
படுவதில்லை. கொத்தடிமை போல் நடத்தப்படுகின்றனர்.
பஞ்சாலைகள்
மட்டுமின்றி, ஜவுளிக்கடை, ஓட்டல், பெட் ரோல் பங்க் என எல்லா துறையிலும்
பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கும்
சம்பளம் உள்ளிட்ட சலுகை, உரிமை வழங்கப்படுவதில்லை. அத்துடன், பல இடங்களில்
பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். இதுபோன்ற பல்வேறு அமைப்புகள்
ஒன்றுதிரண்டு போராட் டம் நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண
முடியும்’’என்று பேசினார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக