புதன், 13 பிப்ரவரி, 2013

திறந்து 5 நாள் ஆகியும் காவிரி நீர் தமிழகம் வரவில்லை : கர்நாடகா சதியா?


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஒகேனக்கல்: கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர், 5 நாட்கள் ஆகியும் தமிழக எல்லையை வந்தடையவில்லை. கர்நாடகம் திட்டமிட்டு குறைவாக நீர் திறந்து விட்டுள்ளதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் டெல்டா பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதையடுத்து தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அதன்படி கடந்த 9ம் தேதி காலை 11 மணியளவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் 48 மணி நேரத்தில் 160 கி.மீ தூரத்தில் உள்ள தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று காலை வரை காவிரி நீர் வந்தடையவில்லை. பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் நீர் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், காவிரி நீர் வருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கர்நாடகம் திட்டமிட்டு குறைவாக நீர் திறந்து விட்டுள்ளதே இதற்கு காரணம் என்று தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் திறந்து விடப்பட்டுள்ள நீர், மணல் உறிஞ்சுவதற்கே போதாது என தெரிவித்துள்ள விவசாயிகள், இதனால் காவிரி கரையோரம் உள்ள அம்மாநில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கே உதவும் என கூறி உள்ளனர்  tamilmurasu.or

கருத்துகள் இல்லை: