அரசு நடத்துவது என்றால், கடன் வாங்கத்தான் வேண்டும். ஜெயலலிதா,
கருணாநிதிதான் கடன் வாங்கியதாகவும், அவர் கடனே வாங்கவில்லை என்பதாகவும்
சொல்கிறார்… அவர் எவ்வளவு கடனை வைத்துவிட்டு போனார் தெரியுமா” என
கேட்டிருக்கிறார் கருணாநிதி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, நான் வாங்கி வைத்து விட்டதைப் போல, முதல்வர் ஜெயலலிதா, திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.
2006-ம் ஆண்டு மே மாதம்தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு, 57,457 கோடி ரூபாயாக இருந்தது.
அதுபோலவே, மின் வாரியத்திலும், 2005 – 2006-ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் சுமையை வைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இறங்கினார்.
இதைப் பற்றி நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், பிறர்மீது பழி சுமத்தி, தப்பித்துக் கொள்ளவில்லை.
அரசு என்றால் கடன் வாங்கத்தான் நேரிடும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றிட, கடன் வாங்கினால் தான், நிறைவேற்ற முடியும்.
இவற்றை பற்றியெல்லாம் ஜெயலலிதா, அவரது பாணியில் புழுதிவாரித் தூற்றுவதும், நாம் ஒவ்வொன்றிற்கும் உண்மை விளக்கம் அளிப்பதும், அதற்கு பின், ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அனைவரையும் குழப்பித் திசை திருப்புவதும், ஜெயலலிதாவின் வாடிக்கையாகி விட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. viruviruppu,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக