ஞாயிறு, 20 ஜனவரி, 2013

Star India அதிரடி ரூ .500 கோடிக்கு சல்மான் ஒப்பந்தம்

ஸ்டார் டிவி சல்மான் கானை கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாம் 
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கானை பொழுதுபோக்கு டி.வி. சேனல் ஒன்று ரூ .500 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறப்பவர் சல்மான்கான். அவர் நடித்து கடந்த 2009ல் வெளியான வான்டட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. திரையுலகில் மீண்டும் வலுவாக கால் பதித்தார். அதன் பிறகு வெளியான அனைத்து படங்களுமே அவருக்கு நல்ல வெற்றியை தேடி தந்தன. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சமூக மீடியாக்களிலும் அவர் மிகவும் பிரபலமானவராக விளங்கி வருகிறார். அவருடைய டி.வி நிகழ்ச்சிகள் அனைத்து வயதினரையும் கவர்ந்து அவரை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்தியுள்ளன.இந்த நிலை யில், யாருமே நம்ப முடியாத அளவுக்கு டி.வி சேனல் ஒன்று சல்மான்கானை ரூ .500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது.சல்மான் நடித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெளியாகவிருக்கும் அனைத்து திரைப்படங்களையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.சல்மான்கானுக்கும் டி.வி. சேனலுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் நாட்டிலேயே முதல் தடவையானது என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான்கானின் இந்த வெற்றி அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: