செவ்வாய், 22 ஜனவரி, 2013

வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகில் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தேடல்களும் சுவாரசியமான விடயங்களும் அங்காங்கே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதல் தடவையாக வேற்றுக்கிரக உயிரனங்கள் பற்றிய உறுதியான தடயம் ஒன்றை விஞ்ஞானிகள் இலங்கையில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிக்குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதனை அரலகன்வில பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எரிகல் துண்டுகளை ஆராய்ச்சி செய்த பிரித்தானிய - இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழுவே தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யா ருடே இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பக்ஹின்காம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் பேராசிரியர் சந்திரா விக்கரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர் என பிரபல ரஷ்யா ருடே இணையத்தளம் தெரிவித்துள்ளது. இதேவேளை வேற்றுக்கிரக உயிரனங்களின் இருப்பு தொடர்பான கோட்பாட்டை உறுதி செய்வதற்குரிய தடயம் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்னல் ஒவ் கொஸ்மொலொஜி என்ற சஞ்சிகையும் ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கு வேற்றுக்கிரக மற்றும் எரிகல் தொகுதிகளே அடிப்படையாக அமைந்துள்ளன என்று பிரித்தானிய - இலங்;கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கமைய பிரபஞ்சத்தில் ஏனைய கிரகங்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை பூமிக்கு வெளியில் உயிரினங்கள் உள்ளன என்பதை பொலநறுவை எரிகல் உறுதிசெய்துள்ளது என சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. Written By ilankainet

கருத்துகள் இல்லை: