செவ்வாய், 22 ஜனவரி, 2013

கனிமொழி: ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும் என்னங்க உறவு?

Viruvirupu
“அந்தம்மா எங்கோ கொடநாட்ல இருக்காப்ல”

“அந்தம்மா எங்கோ கொடநாட்ல இருக்காப்ல”
“ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது?” இவ்வாறு சந்தேகம் எழுப்பியுள்ளார், கனிமொழி எம்.பி.
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நாட்டுப்புறக் கலைவிழா திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு திடலில் நடந்தபோது, அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., “கடந்த தி.மு.க. ஆட்சியில், தை திருநாளை தமிழர்களின் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆட்சி மாறியதும் பழையபடி மாற்றி விட்டார்கள்.
தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்ன உறவு இருக்கிறது? தமிழகத்தை இருண்ட நிலைக்கு தள்ளிய பெருமையை தவிர வேறொன்றும் இல்லை.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இன்றி சிறிய, பெரிய நிறுவனங்கள் நடத்த முடியாமல் நஷ்டத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை பற்றி கவலைப்படாமல் கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்” என்றார்.
ஆ! அம்மா கொடநாட்டில் தங்கியிருந்து ஆட்சி நடத்துவது பற்றி இவரும் பேசிவிட்டாரா? அவதூறு வழக்கு பாய வேண்டுமே!

கருத்துகள் இல்லை: