ஞாயிறு, 20 ஜனவரி, 2013

வாடகை தாய் மூலம் குழந்தை பெற ஓரின சேர்க்கையாளருக்கு திடீர் தடை

புதுடெல்லி: வெளிநாட்டை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பல  சட்ட சிக்கல்களும் பிரச்னைகளும் எழுந்ததை தொடர்ந்து வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள புதிய விதிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த ஓரின சேர்க்கை தம்பதிகள் இனிமேல் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.
அதே போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதை அனுமதிக்காத ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தம்பதிகளும் இனிமேல் இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாயாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் இனிமேல் மருத்துவ விசாவில் இந்தியா வர வேண்டும். சுற்றுலா விசாவில் வந்து குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. வாடகை தாய் குழந்தையை பார்க்க விரும்பினால் காட்ட வேண்டும். தம்பதி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் வாடகை தாய் அங்கு சென்று குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும். வாடகை தாயுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பான நகலை இந்திய தூதரகத்திடம் தர வேண்டும் உள்ளிட்ட புது விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.tamilmurasu.or

கருத்துகள் இல்லை: