செவ்வாய், 22 ஜனவரி, 2013

கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில் அ.தி.மு.க

சென்னை: "மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க முயல வேண்டும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க.,வும், சில கட்சிகளும் உள்ளன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: இம்மாதம், 24ம் தேதி, மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆர்ப்பாட்டம் தொடர்பான ஜெயலலிதா அறிக்கையில், "மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து, துரோகம் இழைத்து வரும் கருணாநிதிக்கு, என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.குழம்பிய குட்டையில் மீன் :காங்., கட்சியின் கூட்டணிக் கட்சி என்ற முறையில், கூட்டணிக்கு துரோகம் செய்யாமல், மத்திய அரசுக்கு உறுதுணையாக தி.மு.க., இருந்த போதிலும், தமிழகத்திற்கான பிரச்னைகள் என்று வரும் போது, தி.மு.க., அவற்றைக் கைவிட்டது உண்டா? அதற்காக, ஓங்கிக் குரல் கொடுக்காமல் இருந்தது உண்டா? ஆனால், ஜெயலலிதாவுக்கும், அவரோடு லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில், அவரை மறைமுகமாக ஆதரிக்கும், சில கட்சிகளுக்கும், காங்., கூட்டணியிலிருந்து, எப்படியாவது தி.மு.க., விலகி விட வேண்டும்.
மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும். அதை வைத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பது தான், அவர்களின் உள்ளார்ந்த எண்ணம். அதை தி.மு.க., நன்றாகவே உணர்ந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar,com

கருத்துகள் இல்லை: