செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கேரளாவில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவலாம்

பாலக்காடு: "கேரளாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்க தேசத்தவர்கள் அதிகளவு ஊடுருவி வருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.கேரளாவில், 13 லட்சம், வெளி மாநிலத் தொழிலாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்கதேசத்தினர் ஊடுருவுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரள உளவுத்துறை சேகரித்த தகவலில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. ஆலப்புழை மாவட்டம், ராமங்கரியில் கடந்த வாரம் பிடிப்பட்ட, வங்கதேசத்தைச் சேர்ந்த கும்பல், நாங்கு ஆண்டுகளுக்கு முன் கேரளா வந்துள்ளது; நன்றாக மலையாளம் பேசும் அவர்களிடம், எவ்வித ஆவணங்களோ; அடையாள அட்டையோ இல்லை. அவர்கள் வைத்திருந்த மொபைல் போனில் ஐ.எம்.இ.ஐ., எண் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தியில், 10 பேர் கொண்ட வங்கதேச கும்பலை, உளவுத் துறை கண்டுபிடித்தது. பாகிஸ்தானுக்கு அடிக்கடி மொபைல் போனில் பேசியதை வைத்து, போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், சாந்திரா மாவட்டம், சுனால் கிராமம் வழியாக வங்கதேசத்தவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரளாவில் அதிகரித்து வரும் வங்கதேசத்தினரை, கட்டுப்படுத்த உதவுமாறு, மத்திய அரசுக்கு, கேரள உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""பிழைப்புக்காக கேரளா வரும் பிற மாநிலத்தவர்களை வரவேற்கிறோம். ஆனால், வெளிநாட்டவர் சட்ட விரோதமாக தங்குவதை அனுமதிக்க முடியாது. வங்கதேசத்தவர்கள், சட்டவிரோதமாக கேரளாவில் வந்து தங்குவது அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது. இவர்களின் வருகையை கட்டுப்படுத்த, எல்லையில் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: