வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சோவின் எங்கே பிராமணன்தான் ரஜினிக்கு பிடித்ததாம்


ஜெயலலிதா முன்பு ரஜினிகாந்த் பேசின பேச்சு :தலையில் அடித்துக்கொண்ட ‘சோ’முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு விருது வழங்கி பாராட்டிய இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஸ்வநாதனை பாராட்டி பேசினார்கள்.நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, ’’புரட்சித்தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர்களுக்கு கலையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டார்கள். ஆனால் பணிச்சுமையின் காரணமாக அந்த பாராட்டுவிழாவை தவிர்த்து விட்டார்கள்.
இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜெயா டிவியின் 14-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டத்தையும் நடத்தும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.சரவணன் சார் போல நானும் ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறேன். குறிப்பாக நியூஸ் ஒளிபரப்புவதற்கு முன்பு வரும் வரலாற்று சுவடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சோ அவர்கள் வழங்கிய எங்கே பிராமணன் நாடகத்தையும் நான் விரும்பிப் பார்த்தேன். திடீரென்று அதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அவர்கள் தான் அதை தொடராமல் இருப்பதை அறிந்தேன். நான் உடனே சோவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் என்னிடம், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள்.

உடனடியாக தொடர இயலாத காரணத்தை சொல்லி விட்டேன் என்றார். இதில் இருந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் பேச்சைக் கேட்காத ஒருவர் உண்டென்றால் அது சோ மட்டும் தான். (அப்போது நடிகரும் எழுத்தாளருமான சோ தலையில் அடித்துக் கொண்டார்)கன்னடர்கள் `போனால் போகட்டும் போடா' பாடலை மொழி தெரியாமலே ரசிப்பார்கள். அப்போது எனக்கு அது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல் என்று தெரியாது. ஒரு சாதாரண ஓட்டல் சர்வராக இருந்த ஒருவர் நடிகராக மாறும் கதை எதிர்நீச்சல்.

இந்தப்படத்தை அந்த கருத்துக்காக விரும்பிப் பார்த்தேன். அப்போது நான் கண்டக்டராக இருந்தபடி நடிக்க முயன்று கொண்டிந்த நேரம். அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது `அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற பாடல் காட்சி வரும்.

அதில் இசையமைப்பாளர்- தனது குழுவினருடன் இசையமைக்க, பாடகர் பாடுவதாக ஒரு காட்சி வந்தபோது, கன்னட ரசிகர்கள் கைதட்டினார்கள். நான் என் அருகில் இருந்தவர்களிடம் எதற்காக அந்தக் காட்சிக்கு கைதட்டினீர்கள்? என்று கேட்டேன். இந்த பாடல் காட்சியில் வருபவர் தான் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்காகத்தான் கை தட்டுகிறோம் என்றார்கள்.பின்னாளில் நான் நடிகரானபோது மூன்று முடிச்சு படத்தில் `வசந்த கால நதியலையே' பாடலில் `மண வினைகள் யாருடனோ' என்று நான் பாடுவதாக வரும் வரிகளுக்கு அவர் குரல் கொடுத்தார். முதலமைச்சரின் இந்த பாராட்டுக்குப் பிறகு உங்கள் புகழ் உலக அளவில் சென்றடையும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: