ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வைஷ்ணவியையும் கஸ்தூரியையும் மதுரை ஆதீனத்திற்கே அழைத்து தங்கச் செய்து???

""மதுரை ஆதீனம், அந்த நித்யானந்தா வால் மாறிவிட்டார். அவரது கூடா சகவாசத்தால் ஆதீனத்திற்குள் பெண்கள் நடமாட்டமும் நிர்வாகக் குளறுபடிகளும் மோசடிகளும் தொடங்கிவிட்டது''’ என்ற குமுறல் மதுரையில் இருந்து வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இது குறித்த தனது மனக் குமுறலை மதுரை ஆதீனத்திடமே கடிதம் மூலம் கொட்டியிருக்கும் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் நம்மிடம், விரிவாகப் பேச ஆரம்பித்தார்....
""தமிழ்நாட்டில் இருக்கும் ஆதீனத்திலேயே மிகப்பெரிய ஆதீனம் மதுரை ஆதீனம்தான். மக்கள் மதுரை ஆதீனத்தின் மீது மதிப்பும் பக்தியும் அக்கறையும் வைத்திருக்கிறார்கள். தற்போது ஆதீனமாக இருப்பவர் 292-வது ஆதீனமாவார். இடையில் அரசியல்வாதிகளுடன் மேடையேறுவது, திரைப் புள்ளிகளோடு மேடையில் தோன்றுவது, அரசியல் சார்பான கருத்துக்களை வெளியிடுவது என சின்னச் சின்ன சர்ச்சைகளில் ஆதீனம் சிக்கினாலும் இப்போது ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போல் அவர் எப்போதும் பெற்றதில்லை''’என்றவர் தொடர்ந்து பேசினார்.

""திருவாரூர் அருகே கச்சனத்தில் ஆதீனத் துக்கு சொந்தமான நவீன வசதிகளுடன் கூடிய மடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்த மடத்துக்கு எதிரே குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த ஒரு பெண்மணி ஆதீனத்தின் பரிவுப் பார்வைக்கு ஆளானார். இதைத் தொடர்ந்து அவரது மூத்த மகள் வைஷ்ணவியையும் இளைய மகள் கஸ்தூரியையும் அடுத்தடுத்து மதுரை ஆதீன மடத்திற்கே அழைத்து வந்து தங்கச் செய்துவிட்டார். இதற்கு முன் எந்தக் காலத்திலும் எந்தப் பெண்ணும் ஆதீனத்தோடு மடத்திற்குள் தங்க அனுமதிக்கப்பட்டதில்லை. மடத்தின் நிர்வாகம், கணக்கு வழக்குகள் எல்லாம் இந்த இரண்டு பெண்களின் கைகளுக்கு தானாக வந்துவிட்டது.

ஏப்ரல் 1-ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாட வைஷ்ணவி, கஸ்தூரி சகிதம் ஆதீனம், கச்சனம் போயிருக்கிறார். அங்கு ஆதீனம் சினிமா நடிகர்கள் பாணியில் விஷேச பார்ட்டி வைத்து அமர்க்களம் பண்ணியதாக ஏரியா மக்களிடமிருந்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்திற்கு புகார் போய், அதை படாதபாடு பட்டு ஆதீனம் சரிக்கட்டியதாக எங்களுக்கு பகீரூட்டும் தகவல்கள் வருகிறது. இந்த மாற்றங்களுக்கு ஒரு பின்னணி இருக்கிறது.


காரைக்குடியில் நடந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதீனம், அதில் கலந்துகொண்ட நித்தியோடு சிரித்துப்பேசினார். எதிராளியின் பலவீனத்தை சரியாக கணிக்கக் கூடிய ஆள் நித்தி. எனவே தனக்கே உரிய வழிகளில் ஆதீனத்தை வசியப்படுத்தி தன் நட்பு வளையத்திற் குள் கொண்டுவந்துவிட்டார். முதற்கட்டமாக தன்னுடன் இருந்த சீடரை மதுரை ஆதீனத்திற்கு அனுப்பிவைத்த நித்தி, அடுத்து நடிகை ரஞ்சிதா வோடு தானே மதுரை ஆதீனத் திற்கு விசிட்டடித் தார்.. அன்று ஆதீனம், சோபா வில் உட்கார்ந்து கொள்ள, நித்தி யோ ஆதீனத்தின் ஆசனத்தில் அமர்ந் திருக்கிறார். அதோடு தனது 4 பெண் சீடர்களை ஆதீனத்துடன் சோபாவில் நெருக்கியடித்து உட்கார வைத்திருக்கிறார். ஆதீனம் சோபாவில் உட்காரவைக்கப்பட்டதே ஆன்மிக மரபு மீறிய செயல். அதைவிடுங்கள், தன்னை உபசரித்த ஆதீனத்திற்கு தங்க செங்கோல் ஒன்றை பரிசாக வழங்கிய நித்தி, கிளம்பும்போது ஆதீனத்திற்கு விரைவில் தங்க சிம்மாசனம் ஒன்றை வழங்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் நித்தி. தனது பெண் சீடர்களையும் மதுரை ஆதீன மடத்துக்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் மூலம் ஆதீனத்தின் சொத்து பற்றிய விபரங்கள் நித்திக்கு போய்க்கொண்டி ருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வைஷ்ணவி, கஸ்தூரி மற்றும் நித்தியின் சிஷ்யைகளோடு ஆதீனம், நித்தியின் பெங்க ளூரு பிடதி ஆசிரமத்திற்கு போயிருக்கிறார். ஆதீனத் தின்மீது நித்திக்கு ஏற்பட்டி ருக்கும் திடீர் பாசத்தின் பின்னால் ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். ஏனென்றால் ஆதீனத்திற்கு பல நூறு கோடி சொத்துக் கள் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதனை தனது ஆதீனமாக்கிவிட்டு தற் போதைய ஆதீனத்தை வெளிநாட்டில் தங்கவைத்து விடுவாரோ நித்தி என்று கவலையடைகிறோம். இந்தச் செயல்பாடுகள் ஆதீனத்தின் தரத்தையும் பாரம்பரிய பெருமையையும் புனிதத்தையும் குறைத் துக்கொண்டிருக்கிறது''’என்றார் கவலையும் ஆதங்கமுமாக.

மதுரை வழக்கறிஞர் சரவணனோ ""மதுரை ஆதீனம் ஓய்வெடுப்பதற்காக ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, ஒரு பெரிய பங்களாவையே கட்டிக் கொடுத்திருக்கிறார். இனாமாக தரப்பட்ட இந்த பங்களா அரங்கில் துறவிகளும் வெளியூர் பக்தர்களும் வந்து தங்கலாம், ஆன் மிக கூட்டங்கள் நடத்தலாம், பஜனைகள் செய்யலாம் என்றுதான் இருந்தது. அந்த பங்களாவை எந்த நோக்கத்திற்காக பாஸ்கர சேதுபதி கொடுத்தாரோ அதற்கு மாறாக, ஒரு தனியார் வசம் வாடகைக்குக் கொடுத்திருக் கிறார்கள். பங்களாவையே இடித்து மாற்றி சிமப் ரெஸிடன்சி என்ற ஸ்டார் ஓட்டலைக் கட்டியிருக்கிறார்கள். இங்குள்ள ஒரு சூட்டின் நாள் வாடகையே 4,500 ரூபாய். தினசரி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கல்லா கட்டுகிறது ஓட் டல் நிர்வாகம். புனித பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்ட இடத்தில் லௌகீக விஷயங்கள் நடக்கின்றன. மதுரை ஆதீனத்தின் புனிதத்தை எல்லா வகையிலும் காக்கத் தவறிய ஆதீனகர்த்தர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருக்கிறோம்''’என்கிறார் காட்டமாய்.

ஆதீனத்தின் புதிய நட்பு புதுப்புது சர்ச் சைகளை உருவாக்கியிருக்கிறது.

-முகில்

thanks nakkeeran + sundaresan. thiruvarur

கருத்துகள் இல்லை: