சனி, 5 மே, 2012

Air India வுக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்த அமெரிக்காமோசமான சேவை

வாஷிங்டன்: வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க போக்குவரத்துத் துறை.
வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியது, விருப்பக் கட்டணங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்காதது, பயணத்தில் ஏற்படும் தாமதம், பயண ரத்து விவரங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடாதது போன்ற குற்றங்களுக்காக ஏர் இந்தியாவுக்கு அமெரிக்க போக்குவத்து துறை, ரூ. 42 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை (80 ஆயிரம் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிப்பதற்காகவே அமெரிக்க போகுவரத்துத் துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் கீழ் முதல் தண்டனை பெற்றுள்ள நிறுவனம் ஏர் இந்தியாதான்!

அமெரிக்காவில் விமான சேவை செய்யும் நிறுவனங்கள், தங்களது அனைத்து விருப்ப சேவைகள், கட்டணங்கள், பயண விவரங்கள் உள்ளிட்ட நுகர்வோருக்கு தேவையான அத்தனை தகவல்களையும் தங்கள் இணையதளத்தின் முன்பக்கத்தில் வெளியிட வேண்டும்.

இந்த விதிமுறைகளை ஏர் இந்தியா மீறியதால்தான், அந்நிறுவனத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க போக்குவரத்து துறை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: