மூத்த காங்கிரஸ் தலை வரும்,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங் களின் முன்னாள் முதல் அமைச்சருமான
என்.டி. திவாரிதான் (வயது 86) தனது தந்தை என்று டில்லி வாலிபர் ரோகித்
சேகர் கூறி வருகிறார்.
இதை என்.டி. திவாரி மறுத்துள்ளார். ஆனால்
என்.டி.திவாரியை மர பணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி டில்லி
உயர்நீதிமன்றத்தில் ரோகித், அவரது தாயார் உஜ்வாலா சர்மா வழக்கு
தொடர்ந்தனர். இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், திவாரியை மரபணு பரிசோத
னைக்கு கட்டாயப் படுத்தலாம், மரபணு பரிசோதனைக்கு அவர் மறுத்தால்,
காவல்துறை உதவியை நாடலாம் என சமீபத்தில் உத்தர விட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்
றத்தில் என்.டி. திவாரி அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை
நீதிபதிகள்அப்தாப் ஆலம், சி.கே. பிரசாத் ஆகியோர் நேற்று விசா ரித்தனர்.
விசாரணை முடிவில், மரபணு பரி சோதனைக்கு என்.டி. திவாரி உட்பட்டு ரத்த
மாதிரியை வழங்க வேண் டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக