புதன், 2 மே, 2012

மதுரை ஆதீனத்தின்Sex scandal நித்தி கும்பல் Black Mail


தமிழகம் முழுதிலும் இருந்தும் நம்மைத் தொடர்பு கொண்ட பலரும்...
""மதுரை ஆதீன மடத்தை நித்யானந்தா கைப்பற்றப்போகிறார் என்பதை, மதுரை ஆதீனத்தின் புதிய நட்பு என்ற கட்டுரை மூலம் கடந்த இதழிலேயே எச்ச ரிக்கை மணியடித்தது நக்கீரன்தான். நக்கீரன் சொன்னது போலவே, அதிரடியாக எல்லாம் நடந்துவிட்டதே'' -என தங்கள் ஆதங்கம் கலந்த குமுறலைக் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 28-ந்தேதி நள்ளிரவு நித்தி டீமோடு, மதுரைக்கு வந்தார் மதுரை ஆதீனம். 29-ந்தேதி காலை லோக்கல் பிர முகர்கள் யாரையும் அழைக்காமல் இர வோடு இரவாகக் கொண்டுவந்து குவிக்கப் பட்ட நித்யானந்தா ஆட்கள் முன்னிலையில் அவசர அவசரமாக, நித்திக்கு ஆதீனகர்த் தர் என்ற மகுடத்தை சூட்டினார் ஆதீனம்.
இதன்பின் நித்தியோடு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மதுரை ஆதீனம் சென்றார். நித்தியும் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட தர்மகர்த்தா கருமுத்து, கோயில் பணியாளர்கள் யாரும் இருக்கவேண்டாம் என்று குருக்கள்கள் உட்பட எல்லோரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டார். இதனால் தாங்களாகவே வழிபாடு நடத்திவிட்டு அவர்கள் கிளம்பி னர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சி யினர், அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆதீன மடத்தின் முன்பு பெருந்திரளாக் கூடினர். ஆதீனத்தின் வரவுக் காகக் கொந்தளிப்போடு கா
நித்தி ஆட்கள் புடைசூழ மடத்துக்கு வந்த ஆதீனம், திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து, திகைத்துப் போய், நித்தி சகிதம் மடத்திற்குள் வேகமாக நுழைந்து
"ஆதீனம் வாழ்க! திருஞான சம்மந்தர் வாழ்க! பாரம்பரியம் மிகுந்த மதுரை ஆதீனத்தின் புனி தம் வாழ்க!' -என இந்து மக்கள் கட்சியினர் கோஷம் எழுப்ப,
பதிலுக்கு நித்தி கோஷ்டி யினர் மடத்தின் வாயிலை மறித்து நின்றுகொண்டு "நித்யானந்த ஜீக்கு ஜே! நித்யானந்த ஜீக்கு ஜே' என எதிர்கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பிற்கும் மோதல் உண்டாகும் நிலைமை ஏற்பட்டது.

உடனே காவல்துறை ஏ.சி. கணேசன், ""பிரச்சினை பண்ணா மல் எல்லோரும் கலைந்து செல்லுங்கள்'' என்றார்.

அர்ஜுன் சம்பத்தோ ""நாங் கள் ஆதீனத்தை சந்திக்க விரும்பு கிறோம். அவரை அவர் விருப் பத்திற்கு மாறாக ஒரு கும்பல் வளைத்திருப்பதாக சந்தேகப் படுகிறோம்'' என்றார் கவலையாக.

நித்தி டீமோ "நித்யானந்தா அனுமதி இல்லாமல் யாரையும் நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம்'’ என்றது அழுத்த மாக.
இதைக்கேட்டு கோபமான ஏ.சி.கணேசன் ""நகருங்கய்யா. உங்களை எல்லாம் பார்த்தா சீடர்கள் மாதிரியா தெரியுது. அடியாட்கள் மாதிரி இருக்கு. உங்க அராஜகத்தை எல்லாம் மதுரையில் வச்சுக்காதீங்க. எல் லோரையும் உள்ளே தள்ளிடு வேன். ஆளுங்களைப் பாரு'' என டோஸ் விட்டவர்,

""இது ஆதீன மடம். பக்தர் கள் யார் வேண்டுமானாலும் போய்வரலாம். வாங்க நானே கூட்டிட்டுப்போறேன்'' என அர்ஜுன் சம்பத்தையும் அவ ருடன் ஒரு சிலரையும் நேரே ஆதீனத்திடம் அழைத்துச் சென்றார்.

ஆதீனத்தைப் பார்த்து கைகூப்பிய அர்ஜுன் சம்பத் ""ஐயா உங்கக்கிட்ட பேசணும்'' என்றார். மதுரை ஆதீனமோ ""யார்ட்டயும் இப்போதைக்கு நான் பேச விரும்பலை'' என்றார் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

ஏ.சி.யோ ""சரி வாங்க. அவரே பேச விரும்பலைன்னு சொல்லிட்டார். பிரச்சினை பண்ணாம கிளம்புங்க'' என அவர்களை வெளியே அழைத்துவந்தார். நித்தி ஆட்கள் அவர்களை இளக்காரமாகப் பார்த்து கிண்டல் செய்ய, இந்து மக்கள் கட்சி டீம் சூடானது. இருதரப்பும் உரசிக்கொள்ளும் முன் காவல்துறையினர் விலக்கி அனுப்பினர்.

"மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக போயும் போயும் நித்யானந்தாவா?' என்ற குமுறலும் எரிச்சலும் பரவலாக இந்து மக்கள் மத்தியில் நிலவிவரும் நிலையில்... ஆதீன மடத்தில் இருப்பவர்களின் மனநிலை எப்படி என்பதை அறிய, ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேலாய் அங்கு தங்கி பணிவிடைகள் செய்து வரும் அவரை சந்தித்தோம். நிறத்தின் பெயரைக் கொண்ட அவரோ ""என் பெயரை வெளிப்படையா போட்டுராதீங்க. ஏன்னா இப்ப புதுசா வந்து ஒட்டிக்கிட்டிருக்கும் கும்பல் என் னை உயிரோடு விட்டுவைக்காது.. ஏன்னா ஆதீனத்துக்கே இவங் களால் ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படுகிறேன்''’ என்றவர், தான் பார்த்ததையும் உணர்ந்ததையும் விவரிக்க ஆரம்பித்தார்...

""ஆறேழு மாதமா ஆதீனத்துக்குள் நடக்கக் கூடாததெல் லாம் நடக்குது. இதுக்கு முன்பு பெண்கள் மடத்துக்கு வந்தா அவங்களை ஹால்லயே நிறுத்தி ஆசிர்வாதம் பண்ணி அனுப் பிடுவார் ஆதீனம். இதன்பின் ஆதீனத்துக்கு வாய்க்கு ருசியா சமைக்க புதுக்கோட்டை கீர்த்திகா, செல்வின்னு ரெண்டுபேர் வந்தாங்க. இதன் தொடர்ச்சியா கீர்த்திகாவை வாடிப்பட்டி யிலும் செல்வியை பரவையிலும் வீடுபிடித்துத் தங்க வைத்த ஆதீனம், அவங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா பெட்ரோல் பங்க் வச்சிக்கொடுத்திருக்கார். இதுக்குப் பிறகு கச்சனத்தைச் சேர்ந்த வைஷ்ணவி வர, தொடர்ந்து வைஷ்ணவி தங்கை கஸ்தூரியும் மடத்துக்கு வந்துட்டாங்க. பிறகு இவங்கதான் எல்லாமும்ன்னு ஆயிடிச்சி. ஒரு கட்டத்தில் தலா ஒருகிலோ தங்கம் தரப்போறதா அவர் சொன்னதா, அவங்க ரெண்டுபேரும் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாங்க.

மதுரை மீனாட்சி பஜார்ல இருக்கும் 62-ஆம் எண் கடையில் மாதா மாதம் இவங்க ரெண்டுபேருக்கும் 15-ல் இருந்து 20 ஆயிரம் ரூபாய்வரை பர்ஃப்யூம் ஐட் டங்களை வாங்கிக்க சொல்லுவார் ஆதீனம். இதே போல் மாசத்துக்கு ஒரு லட்ச ரூபா வீதம் அவங்க பர்ச்சேஸ் பண்ணிக்குவாங்க. ஆதீனத்தின் அப்பா வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் தபால்தந்தி நகர் வீட்டை வைஷ்ணவி பெயருக்கு எழுதித்தர்றேன்னு ஆதீனம் சொல்லியிருக்கார். வைஷ்ணவியோ "சமாதி இருக்கும் வீடு வேண்டாம் வேறு வாங்கிக்கொடுங்கள்'ன்னு சொல்லிடிச்சாம். இந்த நிலையில் 45 வருடமா மடத்திலேயே தங்கி தொண்டூழியம் செய்துவந்த டி.ஆர். என்கிற ராமச்சந்திரன், ஒருநாள் வைஷ்ணவியின் செயல்களைப் பார்த்துட்டு, தனியாக் கூப்பிட்டு கண்டிச்சார். இதைத் தொடர்ந்து வைஷ்ணவி நிர்பந்தம் கொடுத்து ராமச்சந்திரனை மடத்தி லிருந்து வெளியேத்திட்டார். இதுக்காக அவர் பேர்ல கனரா வங்கியில் 5 லட்சத்தை டெபாஸிட் பண்ணி, அந்த வட்டியை மட்டும் வாங்கிக்க, அதற்கான பத்திரம் என்னிடமே பத்திரமா இருக்கட்டும்ன்னு சொல்லிதான் விடைகொடுத்தார் ஆதீனம்.

இந்த நிலையில்தான் நித்தி கும்பல் இங்க வந்து நுழைஞ்சிருக்கு. வந்த வேகத்தில் சமையல் செல்வியை இனி ஆதீனத்துக்குள் வரக்கூடாதுன்னு தடுத்துச்சு. உடனே நகைக்கடை சந்தே வேடிக்கைப் பார்க்க, அந்த செல்வி, "எம் புருஷன் ஆதீனத்தை, ஆம்பளை வேசத்தில் இருக்கும் நித்யானந்தா வசியம் பண்ணிட் டாரே'ன்னு சத்தம்போட்டு அழுது அலப்பறை பண்ணி, ஆதீனத்தின் மானத்தையும் கப்பலேத்துச்சு. வந்த கொஞ்ச நாட்கள்லயே ஆதீனத்தையே வசியப் படுத்தி புதிய ஆதீனமா நித்தி மகுடம் சூட்டிக்கிட்ட தைப் பார்த்தா அதிர்ச்சியா இருக்கு. என்னை மாதிரி மிச்ச சொச்சம் இருக்கும் பழைய ஆளுங்களையும் நித்தி ஆளுங்க இனி வெளியேத்திடுவாங்க. மடமும் மடத்தின் சொத்தும் அவங்க கைக்குப் போனபின் ஆதீனத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலை வந்துடும். அதான் ஒரே கவலையா இருக்கு''’ என்றார் கலக்கத்தோடு.

திருப்பனந்தாள் ஆதீனமட பிரதிநிதி சுரேஷ்பாபுவோ ""சண்டீஸ்வர நற்பணி இயக்கத்தைத் தொடங்கி ஆன்மீக மடங் கள், கோயில்களில் ஏற்படும் தவறுகளை நாங்கள் தட்டிக் கேட்டுவருகிறோம். மதுரை ஆதீனம் சிக்கலில் இருக்கிறார் என்று தகவல் வந்தது. அதனால் அவரை சந்திக்கப் போனேன். 400-க் கும் மேற்பட்ட நித்யானந் தத்தின் ஆட்கள் தடுத்தனர். காவல்துறை உதவியோடு ஆதீனத்தை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் "சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன். என்னை ஒன்றும் கேட்காதே' என்று சொல்லிவிட்டார். அவர் முகத்தில் மிரட்சி இருப்பதை என்னால் உணர முடிந்தது. செக்ஸ் புகாரில் இருப்பவரை ஆதீனமாக்குவது முறையா என்றேன். சரியான பதில் அவரிடமிருந்து வரவில்லை. மடத்தில் இருப்பவர்கள் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். நானோ "இதைக் குடிக்ககூட எனக்கு பயமாக இருக்கிறது. இதில் விஷம் கூட கலந்திருக்கலாம்' என்றபடி வெளியே வந்துவிட்டேன். ஆதீனத்துக்கு சொந்தமாக நகைகடை சந்தில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இப்போதே நித்யா னந்தா ஆட்கள் போய், "உங்கள் வாடகை ஒப்பந்தம் ரத்தாகிறது. புதிய ஒப்பந்தத்தை இனி நித்யானந்தா பெயரில் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த அட் வான்ஸ் தொகையும் 30 விழுக்காடு உயர்த் தப்படுகிறது' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆக ஆதீனத்தையே முழுதாக விழுங்கும் காரியங்கள் நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. ஆதீனம் உற்சாக மாக இருப்பதுபோல் வெளியே காட்டிக் கொண்டாலும் அவர் உள்ளுக்குள் ஏதோ பீதி யில்தான் இருக்கிறார்.’ என்னைப் பொறுத்த வரை ஆதீன மடம் நித்தி கும்பல் புகுந்ததால் ஆபாச மடமாகி விட்டது'' என்றார் படபடப்பாக.

நாம் ஆதீனத்தை சந்தித்து இது குறித்துக் கேட்டபோது ""நித்யானந்தா கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஞானமும் புலமையும் போர்க்குணமும் கொண் டவர் நித்யானந்தா. என்னை வருத்திக் கொண்டிருந்த இளைப்பு நோயை மூன்றே நாளில் சரிசெய்த தெய்வம் அவர். அவரை இந்து அமைப்புகள் எதிர்ப்பது அவைகளின் அறியாமை யையும் பொறாமையையும் தான் காட்டுகிறது. நித்யானந்தா எனக்கு ஒருகோடி கொடுத்திருக்கிறார். இன்னும் 4 கோடி ரூபாயைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்''’ என்றார்.

அவருடன் இருந்த நித்யானந்தாவோ ""என்னை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் யாராலும் என்னை அழிக்க முடியாது. மதுரை ஆதீனத்திற்கு பக்தர்கள் யார் வந்தா லும் தடுக்க மாட்டோம். ஜூன் 5-ந் தேதி மதுரை ஆதீன மடத்தில் நடக்கும் கனகாபி ஷேக நிகழ்ச்சியின் போது ஆதீனத்திற்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக் களை என் பெயருக்கு எழுதிக்கொடுக்கிறார் ஆதீனம்'' என்றார் கூல் புன்னகையோடு.

""மதுரை ஆதீனமடத்தை சுயநலக் கும்பலின் பிடியில் இருந்து மீட்க, 10-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் சார்பில் நீதித்துறையை நாட இருக்கிறோம்'' என் கிறார் இந்துமக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன்.

மதுரை ஆதீன மடம் பலத்த மற்றும் பலான சர்ச்சை சூறாவளியில் சிக்கிக்கொண் டிருக்கிறது.

-முகில்
""ஆதீனம் அப்பா இட்ட கட்டளை''
-குறிஞ்சி சுவாமிகள்!

திருவாதவூரில் திருமறைநாத ஆசிரமத்தை நடத்திவரும் அருட்திரு காசிவாசி ஸ்ரீஸ்ரீஸ்ரீ செந்தில் குறிஞ்சி சுவாமிகளிடம், ஏற்கனவே அவர் மதுரை ஆதீனத்தில் இருந்தவர் என்ற முறையில் ஆதீன விவ காரங்கள் குறித்துக் கேட்டோம். செந்தில் குறிஞ்சி சுவாமிகளோ ""சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ரவிசங்கர் சுவாமிகள், பெங்களூருவில் நடந்த தனது பிறந்த நாள் விழாவுக்கு மதுரை ஆதீனத்தை அழைத் திருந்தார். அப்போது அவருடன் நாமும் சென்றிருந் தோம். அங்கே இந்த நித்யானந்தா தான் எழுதிய "கதவைத் திற காற்று வரட்டும்' என்ற நூலை ஆதீனத் திடம் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்க மறுத்து வெறுப்போடு காரில் ஏறிவிட்டார் ஆதீனம். ஏன் என்று கேட்டபோது, "அவன் போலி சாமியார்' என்றார். அப்படிப்பட்டவருக்கு இப்போது ஆதீனம் எப்படி பட்டம் சூட்டுகிறார் என்று தெரியவில்லை. ஒருவர் ஆதீனமாக ஆக வேண்டுமெனில் முழுமையாய் சைவ சித்தாந்த பயிற்சியை எடுக்கவேண்டும். அதேபோல் பிற ஆதீன மடம் ஒன்றில் பயிற்சி எடுக்கவேண்டும். இவரே தருமை ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் தம்புரானாய் இருந்து பயிற்சி எடுத்தவர்தான். அதோடு ஜாதகப் பூர்வமாக அலசிதான் ஆதீனத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர் வெள்ளை உடையோடுதான் ஆதீனத்திற்குள் நுழையவேண்டும். சித்தி பெற்றுதான் காவியாடை பூணவேண்டும். பின்னர் காது குத்தி தலைமுடி மழித்து முடி சூட்டவேண்டும். இது எதுவும் நித்யானந்தா விசயத்தில் நடந்ததாக நாம் அறியவில்லை. ஆதீனத்தின் தந்தையார் குமாரசாமி பிள்ளை, இறக்கும்போது, "உனக்கு வாரிசில்லை. இனி உனக்கு சரியான வாரிசு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு இல்லை. எனவே ஆதீனத்தை அரசாங் கத்திடம் ஒப்படைத்துவிடு' என்று கட்டளையிட்டார்கள்.

இதையும் நாம் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றோம், ஆனால் ஆதீனம் ஆதீனத்திற்குரிய மரபு களையும் கூட மறந்துவிட் டது வருத்தத்தையே தருகிறது'' என்றார் நிதானமாக.
thanks nakkeeran + venkata subbaiahar ,thiruchi with a plea for intervention in this scandal

கருத்துகள் இல்லை: